பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றிவந்தவர் ஆஷிக். இவர் பள்ளி வளாகத்திலுள்ள விடுதியில் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் தங்கிப் பணியாற்றிவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த கணவர் ஆஷிக் தலையணையால் அழுத்தி மனைவியைக் கொலைசெய்திருக்கிறார். பின்னர் குழந்தைகள் முன்னிலையில் அந்தப் பள்ளியின் சமையலறைக் கொப்பரையில் தன் மனைவியின் சடலத்தைப் போட்டுக் கொதிக்கவைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இதையெல்லாம் நேரில் பார்த்து நடுங்கிப்போன அந்த நபரின் 16 வயது மகள், அங்கிருந்து வெளியேறி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், கொல்லப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வழக்கு பதிவுசெய்தனர். மேலும், இறந்த பெண்ணின் ஆறு குழந்தைகளில் மூன்று பேரை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் போலீஸார், மனைவியைக் கொலைசெய்து கொப்பரையில் போட்ட நபரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.