Published:Updated:

`பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு, ஆண்மை நீக்கமே தண்டனை!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இம்ரான் கான்

``இது போன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பங்களில் ஈடுபடுபவர்களைப் பொது இடத்தில் தூக்கிலிடுவது அல்லது ஆண்மை நீக்கம் (Chemical Castration) செய்வதே தகுந்த தண்டனையாக அமையும்.’’

`பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு, ஆண்மை நீக்கமே தண்டனை!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

``இது போன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பங்களில் ஈடுபடுபவர்களைப் பொது இடத்தில் தூக்கிலிடுவது அல்லது ஆண்மை நீக்கம் (Chemical Castration) செய்வதே தகுந்த தண்டனையாக அமையும்.’’

Published:Updated:
இம்ரான் கான்

``பாகிஸ்தான், லாகூரில் காரில் செனறுகொண்டிருந்த பெண்ணை இரு குழந்தைகளுக்குத் தாய் என்று கூடப் பாராமல், பாலியல் வன்கொடுமை செய்தவர்களை, பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் அல்லது அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை’’ என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாடச் செய்திகளாகிவிட்டன. பெண்களுக்கு அநீதிகளும் கொடுமைகளும் எல்லா தரப்பிலும், எல்லா வயதினருக்கும் பாகுபாடின்றி இழைக்கப்படுகின்றன. கருவிலே அழிப்பது, சிசுக்கொலை எனத் தொடங்கி வாழ்நாள் இறுதிவரை கொடுமைகள் தொடர்கதையாகப் பெண்களைச் சித்ரவதை செய்கின்றன.

2013, டில்லி நிர்பயா வழக்குக்குப் பிறகும் பல நிர்பயாக்கள் பாதிக்கப்பட்டுவரும் சூழலில், சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூர் நகரில் பெண் ஒருவர், தன் குழந்தைகளின் கண்முன்னே துப்பாக்கிமுனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் லாகூரிலிருந்து, தன் இரு குழந்தைகளுடன் அருகிலுள்ள மாநகருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெண். காரில் எரிபொருள் திடீரென தீர்ந்துபோனதால், அவசர உதவி போலீஸாருக்கு போன் செய்து உதவி கேட்டுவிட்டு, தன் காருக்குள் அமர்ந்திருந்தார்.

Representational Image
Representational Image

அப்போது, அங்கே வந்த இருவர், காரிலிருந்த பெண்ணை வெளியே இழுத்து துப்பாக்கிமுனையில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்தக் கொடூர சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகளின் கண்ணெதிரே நிகழ்ந்திருப்பது மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பாகிஸ்தானில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் மக்கள் மத்தியில் தூக்கிலிட வகை செய்யும் சட்ட மசோதா, கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டு நாடாளுன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், போதிய ஆதரவு இல்லாததால், அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கியிருக்கும் பொதுமக்கள், பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளைப் பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் மற்றும் அஜாக்கிரதை அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

முன்னதாக, காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து டி.என்.ஏ மாதிரிகளைக் கைப்பற்றியதோடு, தாக்குதல் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த நபர்களை அடையாளம் காணும் வகையில் செல்போன் நெட்வொர்க்குகளிலிருந்து ஜி.பி.எஸ் தரவையையும் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடிவருகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரைத் தேடிவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

அவர் கூறுகையில், ``இது போன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பங்களில் ஈடுபடுபவர்களைப் பொது இடத்தில் தூக்கிலிடுவது அல்லது ஆண்மை நீக்கம் (Chemical Castration) செய்வதே தகுந்த தண்டனையாக அமையும்.

அதேநேரம், பொது இடத்தில் தூக்கிலிடுவது, ஆண்மை நீக்கம் போன்ற தண்டனைகள் மனித உரிமை மீறல் விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. இதனால், ஐரோப்பிய யூனியன் பாகிஸ்தானுக்கு அளித்திருக்கும் வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் என்னிடத்தில் கூறியதால், அந்த முடிவை மாற்றிக்கொண்டேன். இருப்பினும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.