Published:Updated:

சேலம்: பட்டாசுக்கடையில் தகராறு; வியாபாரி நாக்கை அறுத்த பஞ்சாயத்து துணைத் தலைவரைத் தேடும் போலீஸ்!

பட்டாசு விற்பனை

தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கண்ணனைக் கைதுசெய்தனர். அவரிடம் ஏற்கெனவே சேட்டுக்கும், இவர்களுக்கும் ஏதும் முன் விரோதம் இருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

சேலம், காடையாம்பட்டி அருகே பண்ணப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவர் தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுக்கடை வைத்திருந்தார். இந்த நிலையில் பட்டாசு வாங்கச் சென்ற பண்ணப்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன், அவரின் தம்பி கண்ணன் ஆகியோர் கடையில் பணியாற்றிவந்த ஓமலூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதை சேட்டு தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரைச் சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளி, பின்னர் அவர்களது இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியால் அவரின் நாக்கை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம்பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

கத்தி
கத்தி

இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் சேட்டுவை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கண்ணனைக் கைதுசெய்தனர். அவரிடம் ஏற்கனவே சேட்டுக்கும், இவர்களுக்கும் ஏதும் முன்விரோதம் இருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பிய ஓடிய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகனைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.