Election bannerElection banner
Published:Updated:

நாமக்கல்: கிராமத்து வீட்டில் பாலியல் தொழில்; 10 பெண்கள் மீட்பு! - பெண் உட்பட 5 பேர் கைது

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்

பரமத்திவேலூரில் பெண்களைவைத்து, கிராமப் பகுதியில் மறைமுகமாக பாலியல் தொழில் செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிராமத்து வீட்டில் பத்துப் பெண்களைவைத்து பாலியல் தொழில் செய்துவந்த வீட்டின் உரிமைக்காரப் பெண், புரோக்கர்கள், வாடிக்கையாளர்கள் என ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சங்கர் மற்றும் ஜோசப்
சங்கர் மற்றும் ஜோசப்
நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்! - உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இருக்கிறது வடக்கு நல்லியம்பாளையம். இங்குள்ள ஒரு வீட்டில் 10-க்கும் மேற்பட்ட பெண்களைவைத்து தொடர்ந்து பாலியல் தொழில் நடத்தப்பட்டுவருவதாக பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரனுக்கு தொடர் புகார் வந்திருக்கிறது. இதனால், அவர் போலீஸாரை அலெர்ட் செய்தார். இந்தநிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போலீஸாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பரமத்தி வேலூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தத் தனிப்படை போலீஸார் பாலியல் தொழில் நடந்த வீட்டைச் சுற்றிவளைத்து, திடீர் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டுக்குள் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த அழைத்து வரப்பட்டிருந்த 10 பெண்களும், இரண்டு ஆண் வாடிக்கையாளர்களும் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் கைதுசெய்த போலீஸார், 10 பெண்களை அவர்களது பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரி
கைது செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரி

மேலும், தனது வீட்டில்வைத்து பாலியல் தொழில் நடத்திய வடக்கு நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பரின் மனைவி சாமுண்டீஸ்வரி (வயது: 53), பெண்களை அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த, திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறை, காமராஜ் மன்ற தெருவைச் சேர்ந்த சங்கர் (வயது: 45), திருப்பத்தூர் அருகேயுள்ள ஆசிரியர் நகர், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் (வயது 55), பாலியல் தொழில் நடந்த வீட்டுக்கு வாடிக்கையாளராக வந்திருந்த இரண்டு பேர் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்தனர். மொத்தத்தில், நான்கு ஆண்கள், தனது வீட்டில்வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைதுசெய்து, அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், சாமுண்டீஸ்வரி சேலம் பெண்கள் மத்தியச் சிறையிலும், சங்கர், ஜோசப், வாடிக்கையாளர்களான இரண்டு ஆண்கள் உட்பட நான்கு ஆண்கள் ராசிபுரம் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பரமத்தி வேலூரில் பெண்களைவைத்து, கிராமப் பகுதியில் மறைமுகமாகப் பாலியல் தொழில் செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு