Published:Updated:

காதலுக்கு எதிர்ப்பு.. ரயில் நிலையத்தில் விஷம்!- புதுக்கோட்டையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி
தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி

விரக்தியில் இருந்த காதலர்கள் தங்களை இனி பெற்றோர்கள் வாழவிடமாட்டார்கள் என்று எண்ணி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(21). மணேல்குடி அருகே சிங்கவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ(18). பள்ளிக்கூடம் படிக்கும் போதே இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பின் காதலாக மாறியிருக்கிறது. அதன்பின்பு, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவீட்டாரின் பெற்றோர்களுக்கும் இது தெரியவரவே, இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், விரக்தியில் இருந்த காதலர்கள் தங்களை இனி பெற்றோர்கள் வாழவிடமாட்டார்கள் என்று எண்ணி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி
தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி

இதற்கிடையே நீண்ட நேரம் ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் ரயில் வராததால், அதன்பிறகு விஷம் குடித்து இறந்துவிடலாம் என்று திட்டமிட்ட காதல் ஜோடி பூச்சி மருந்து வாங்கி வந்து ரயில் நிலையத்தில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது . இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி டிஎஸ்பி, மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு