Published:Updated:

`எந்த பெற்றோருக்குத் தான் பொறுக்க முடியும்?'- திருமண வற்புறுத்தலால் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு

மருத்துவர் சரவணன்
மருத்துவர் சரவணன்

வேற பொண்ண எதுவும் லவ் பண்ணுறீயானு கேட்டுப்பாத்துட்டாங்க. லைப்ல ஒரு இடத்துக்கு வந்ததுக்குப் பிறகுதான் கல்யாணம் பண்ணணும்னு சொல்லி இரண்டு வருடத்தைக் கடத்திட்டான்.

திருமணம் செய்யச்சொல்லி குடும்பத்தினர் வற்புறுத்தியதால் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன்
சரவணன்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கூரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன். எம்.பி.பி.எஸ் முடித்து மயக்கவியல் சிறப்புப் பட்டமும் பெற்ற இவர், திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக நான்கு வருடங்களாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சரவணனுக்கு 34 வயதாகிவிட்டதால் திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர், இப்போது வேண்டாம் எனக் கடந்த முன்று வருடங்களாக காலம் கடத்திக்கொண்டே இருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2 மாதமாகப் பெற்றோர் தீவிரமாகப் பெண் பார்த்து வந்ததோடு, நிச்சயம் செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டார்களாம். இச்சம்பவம் சரவணனுக்குப் பிடிக்கவில்லையாம்.

கடந்த 26-ம் தேதி வழக்கம்போல் இரவுப் பணிக்கு சரவணன் வந்துள்ளார். 4-வது மாடியில் அவரது ரூமில் தனியாக இருந்த அவர், அதிகாலையில் தனக்குத்தானே அதிக அளவிலான மயக்க ஊசிபோட்டுள்ளார். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் சரவணனை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது.

மருத்துவர் சரவணன்
மருத்துவர் சரவணன்

கையில் ஊசி போட்டதற்கான சிரஞ்சி கிடந்தது. இதையடுத்து, அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மயக்க மருந்தைச் செலுத்தியிருந்தது தெரியவந்தது. உடனே அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். என்ன நடந்தது என்று சரவணனின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ``தம்பி, எங்க பையனுக்கு வயசு 35 ஆகுது. அவன்கூட படித்த பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோட இருக்காங்க. இவன் மட்டும் இப்படி இருந்தா எந்த அப்பா, அம்மாவுக்குத்தான் பொறுக்க முடியும் சொல்லுங்க. ஏண்டா கல்யாணம் பண்ண மாட்ற. வேற எதுவும் பொண்ண லவ் பண்ணுறீயானு கேட்டுப்பாத்துட்டாங்க.

லைப்ல ஒரு இடத்துக்கு வந்ததுக்குப் பிறகுதான் கல்யாணம் பண்ணணும்னு சொல்லி இரண்டு வருடத்தைக் கடத்தியிருக்கிறார். இவனோட அப்பா அம்மாவுக்கும் வயசு ஆகுதுனு நெனச்சி சரவணனை கல்யாணம் பண்ணசொல்லி வற்புறுத்தினாங்க. அதற்கு அவன் பெங்களூர்ல அவுங்க பிரென்ட்ஸ்கூட சேர்ந்து ஆஸ்பிட்டல் கட்டப்போகிறதாகவும் அதன் பிறகு கல்யாணம் பண்ணிக்கிறதாவும் சொல்லிக்கிட்டு இருந்தான்.

 திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

ஆனா அதுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவன்கிட்ட கேட்டா இப்படிதான் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி காரியத்தை கடத்துவான்னு, எங்க சொந்தக்காரப் பொண்ணைப் பார்த்து நிச்சயம் பண்ணலாம்னும் முடிவெடுத்து அவனிடம் சொன்னோம். ஆனா பாவிப்பய இப்படிப்பட்ட முடிவு எடுப்பாணு நினைக்கவில்லை" என தழுதழுத்தார். இதுகுறித்து அவரின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தற்கொலையா கொலையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பின் செல்ல