Published:Updated:

`ஏழ்மையும் எதிர்காலத்தை நினைத்த பயமும்தான் காரணம்!' - உசிலம்பட்டி சிசுக்கொலையில் அதிரவைத்த பெற்றோர்

பெண் சிசுக் கொலை
பெண் சிசுக் கொலை

`இதை எங்களால் ஏற்க முடியவில்லை. ரெண்டாவது பொண்ணா பொறந்துருச்சே என்ன பண்ணப் போறேனு தெரிஞ்சவங்க கேட்க ஆரம்பிச்சாங்க.'

"பெற்ற குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொன்றதற்கு முக்கியக் காரணம் ஏழ்மையும் எதிர்காலத்தை நினைத்த பயமும்தான்" என்று வைரமுருகன் - சௌமியா தம்பதியர் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளது பலரையும் கலங்க வைத்துள்ளது.

சிசுக்கொலை
சிசுக்கொலை

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே புள்ளேரிப்பட்டி ஊராட்சியில், பிறந்து 33 நாள்களான பெண் குழந்தையைப் பெற்றவர்களே கொன்று புதைத்த சம்பவம் இப்பகுதி மக்களையும் அரசையும் அதிர வைத்துள்ளது. இதுபற்றி தகவல் தெரிந்து செக்காணூரணி காவல்துறையினர் வைரமுருகன் சௌமியா தம்பதியரிடம் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

முதலில் மறுத்தவர்கள் பின்பு எருக்கம்பால் கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். வீட்டருகே புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டியெடுத்து உடற்கூறாய்வு செய்தனர். அதன் அறிக்கை வந்த பின்புதான் குழந்தை எப்படி இறந்தது என்பது உறுதியாகத் தெரியும்.

சௌமியா
சௌமியா

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் ``நாங்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறோம். ஏற்கெனவே 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அடுத்தது ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பினோம். ஆனால், மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. இதை எங்களால் ஏற்க முடியவில்லை.

ரெண்டாவது பொண்ணா பொறந்துருச்சே என்ன பண்ணப் போறேனு தெரிஞ்சவங்க கேட்க ஆரம்பிச்சாங்க. பொண்ணை வளர்த்து ஆளாக்குறது ரொம்ப கஷ்டம். அதனால இந்தக் குழந்தையைக் கொன்று விட முடிவு செய்தோம்.

வைரமுருகன்
வைரமுருகன்

எருக்கம்பாலைக் கொடுத்தோம். அதன் பின் இறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குப் பக்கத்தில் குழியைத் தோண்டி புதைச்சோம். குழந்தையை வேற யாரிடமும் கொடுக்க எங்களுக்கு விருப்பமில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுத்தோம். வசதி இல்லாததுதான் இதுக்குக் காரணம். பெற்ற குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொன்றதற்கு முக்கியக் காரணம் ஏழ்மையும் எதிர்காலத்தை நினைத்த பயமும்தான்" என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு