Published:Updated:

சென்னை: பிறப்புச் சான்றிதழால் உண்மை தெரிந்த மாணவி - இன்ஸ்டாகிராம் நட்பால் வெளியேறினாரா?

 மாணவி மாயம்
மாணவி மாயம் ( Representational Image )

சென்னையில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். மாணவியை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை, கொரட்டூரைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என்று புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், `எனக்கு திருமணமாகி 31 ஆண்டுகளாகின்றன. நானும் எனது மனைவியும் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டோம். எங்களுக்கக் குழந்தை இல்லை. அதனால் நானும் எனது மனைவியும் சேர்ந்து பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடிவுசெய்தோம்.

குழந்தை
குழந்தை
Representational Image

இதையடுத்து 5.8.2005-ம் ஆண்டு புதுச்சேரியிலுள்ள ஓர் ஆசிரமத்திலிருந்து மூன்று மாதப் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தோம். தற்போது அவளுக்கு 16 வயதாகிறது. தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு எனது மகளைக் காணவில்லை. அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தேன்.

போலீஸார் விசாரணை நடத்தி அரக்கோணத்திலுள்ள எனது உறவினர் வீட்டில் எனது மகள் இருப்பதைக் கண்டறிந்து என்னிடம் ஒப்படைத்தனர். அப்போது எனது மகளிடம் விசாரித்தபோது, பள்ளியிலுள்ள பிறப்புச் சான்றிதழ் மூலம், தான் வளர்ப்பு மகள் என்பதைத் தெரிந்துகொண்டதால் வீட்டைவிட்டுச் சென்றது தெரியவந்ததது. அப்போது எனது மகளுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது. போலீஸாரின் அறிவுரைப்படி வேறு பள்ளியில் எனது மகளைச் சேர்த்தேன்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு 9-ம் வகுப்புக்குப் பள்ளி தொடங்கியிருக்கிறது. அதனால் எனது மகள் பள்ளிக்குச் சென்றார். 10-ம் தேதி காலை எனது மகள் படிக்கும் பள்ளியிலிருந்து எனக்கு போன் வந்தது. அதில் பேசிய ஆசிரியை ஒருவர், எனது மகள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறினார். உடனே, நான் எனது மகளைத் தேடினேன். மேலும், அவளின் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபகாலமாக எனது மகள், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞர் ஒருவருடன் பழகிவந்தாள். அது எனக்குத் தெரிந்ததும், கடந்த மாதம் அவளைக் கண்டித்தேன். தற்போது அந்த இளைஞரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் எனது மகள், அந்த இளைஞருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

காணவில்லை
காணவில்லை

காணாமல்போன தினத்தன்று எனது மகள், பள்ளிச் சீருடை அணிந்திருந்தாள். ஐந்தடி உயரம், மாநிறமாக இருப்பாள். எனவே, எனது மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. புகாரின்பேரில் கொரட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து மாணவியைத் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு