Published:Updated:

திருப்பூர்: காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை - பாதிரியார் கைது

போக்சோ வழக்கு

காப்பகத்தின் கண்காணிப்பாளரும், பாதிரியாருமான ஆண்ட்ரூஸ் கடந்த 15 நாள்களுக்கு முன்பு மாணவியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

திருப்பூர் புறநகர்ப் பகுதியில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகிலுள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளராக, பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்துவருகிறார்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்போது வீட்டுக்குச் சென்ற 14 வயதான மாணவி ஒருவர், தன்னுடைய பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஊத்துக்குளி போலீஸில் புகார் அளித்தனர்.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

``பாதிரியார் ஆண்ட்ரூஸ் கடந்த 15 நாள்களுக்கு முன்பு மாணவியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார். எனவே, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் பாதிரியார் ஆண்ட்ரூஸை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.