Published:Updated:

பள்ளி மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை! - போக்சோவில் கைதான ஆட்டோ ஓட்டுநர் - நடந்தது என்ன?

பாலியல் தொல்லை

பட்டாபிராம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.

பள்ளி மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை! - போக்சோவில் கைதான ஆட்டோ ஓட்டுநர் - நடந்தது என்ன?

பட்டாபிராம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.

Published:Updated:
பாலியல் தொல்லை

ஆவடி அருகில் உள்ள பட்டாபிராம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர், தான் படிக்கும் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாது கடந்த சில தினங்களாக வீட்டிலேயே இருந்துவந்திருக்கிறார். கடும் மனஉளைச்சலில் இருந்த அந்த மாணவி சம்பவம் நடந்த அன்று வீட்டைவிட்டு வெளியேறி பட்டாபிராம் ஐ.ஏ.எஃப் சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுமியை வலுக்கட்டாயமாகத் தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருக்கிறார். ஆட்டோவில் ஏற்றிய சிறுமியை வெள்ளவேடு பகுதியில் முட்புதருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாத சிறுமி அங்கிருந்து அலறியடித்துத் தப்பித்து ஓடிவந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அழுதுகொண்டிருந்த சிறுமியைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் சிலர், அவரை மீட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனையடுத்து போலீஸார் அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

கைதான நபர்
கைதான நபர்
Durairaj G

விசாரணையில், சிறுமியைக் கடத்திச் சென்றது பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸார் போக்சோ சட்டத்தில் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.