Published:Updated:

டெல்லி: காவல் துணை ஆணையர் காரை இடித்த வழக்கு; Paytm நிறுவனருக்கு ஜாமீன்!

paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா

டெல்லி மாவட்ட காவல் ஆணையரின் காரை இடித்ததாகக் கைது செய்யப்பட்ட paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஜாமீன் பெற்றார்.

டெல்லி: காவல் துணை ஆணையர் காரை இடித்த வழக்கு; Paytm நிறுவனருக்கு ஜாமீன்!

டெல்லி மாவட்ட காவல் ஆணையரின் காரை இடித்ததாகக் கைது செய்யப்பட்ட paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஜாமீன் பெற்றார்.

Published:Updated:
paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா

கடந்த மாதம் 22-ம் தேதி டெல்லி மாவட்ட காவல் ஆணையரின் (டி.சி.பி) காரை, Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் கார் இடித்ததாக, டி.சி.பி-யின் கார் ஓட்டுநர் கான்ஸ்டபிள் தீபக் குமார் அளித்த புகாரின் பேரில் விஜய் சேகர் சர்மா வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ன் படி, கடந்த மாதம் 22-ம் தேதி விஜய் சேகர் சர்மாவின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார், டெல்லி தெற்கு மாவட்டத்தில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டி.சி.பி-யின் வாகனத்தை மோதிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

டிசிபி காரை இடித்த வழக்கில் paytm நிறுவனருக்கு ஜாமீன்
டிசிபி காரை இடித்த வழக்கில் paytm நிறுவனருக்கு ஜாமீன்

இதையடுத்து விஜய் சேகர் சர்மாவின் கார் பதிவு எண்ணை வைத்து அவர் மீது மாள்வியா நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டெல்லி காவல் செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா இது தொடர்பாக, ``போலீஸார் சர்மாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கு குறித்து டி.சி.பி ஜெய்கர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism