Published:Updated:

`உங்கள் நகை தலைமை அலுவலகத்தில் இருக்கிறது!’ - மக்கள் அதிர்ச்சி; நிறுவன ஊழியர்களைத் தேடும் போலீஸ்

நிதி நிறுவனம்
நிதி நிறுவனம்

மோசடி செய்த நகைளை உருக்கி, தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்திருப்பதாகவும், வேறு சிலரின் நகைகளை விற்றுவிட்டதாகவும் ஆனந்தராஜ் கூறியதாகத் தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் சாரா அசோசியேட்ஸ் (SARA ASSOCIATES) என்ற நிறுவனம் அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டுத்தருவதாக அறிவித்தது. நிதி நிறுவனங்கள், வங்கிகள், நகை கடன் நிறுவனங்களில் வைக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தருவதாகவும், அதற்குக் குறைந்த வட்டி பெறுவதாகவும் அறிவித்தது. மேலும், தங்களிடம் நகையைத் தந்தவர்கள் விரும்பும்போது நகையை உடனே பெற்றுக்கொள்ளலாம் என்றும்  கூறியதை நம்பிப் பலரும் அந்த நிறுவனத்துக்குப்  படையெடுத்தனர்.

நிதி நிறுவனம்
நிதி நிறுவனம்

தனியார் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், அடகுக் கடைகளில் நகைகளை அடமானம்வைத்த சீட்டுகளுடன் இந்த நிறுவன மேலாளர் மாசிக், துணை மேலாளர்கள் சம்பத், ஆனந்தராஜ், ரவிச்சந்திரன், பாலு, பாஸ்கர் உள்ளிட்டோர் பொதுமக்களின் நகைகளை மீட்டுத்  தங்களிடம் வைத்துக்கொண்டனர். மீட்கப்பட்ட நகைகளுக்கு மாதா மாதம் குறைந்த வட்டி பெற்றுக்கொண்டனர். 

ஒருகட்டத்தில் நகை உரிமையாளர்கள் அசல், வட்டியுடன் நகைகளை மீட்க அந்த நிறுவனத்தை அணுகியபோது, `நகைகள் டெல்லியிலுள்ள  தலைமை அலுவலகத்தில் இருப்பதாகவும்’,  `தற்போது கொரோனா சமயம் என்பதால், நகைகள் கிடைப்பதற்கு ஆறு மாதங்கள் ஆகும்" என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரியும்  ஆனந்தராஜ், சம்பத் இருவரையும் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டனர். அவர்கள் மூலம்  குறிப்பிட்ட நிறுவன மேலாளர் மாசிக், ரவிச்சந்திரன், பாலு, பாஸ்கர் ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் போனை எடுக்கவில்லை.  போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டனர்.

மேலும், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நகையைத் தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்ததால் சம்பத், ஆனந்தராஜ்  இருவரும் விடுவிக்கப்பட்டனர். எனினும், ஆனந்தராஜ், சம்பத் இருவரும் திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல் நிலையத்தில் தங்களைச் சிலர் தாக்கிவிட்டதாக புகார் தந்தனர். சந்தேகித்த போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது நிதி நிறுவன நிர்வாகிகள் மீது சந்தேகம் எழுந்தது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஆனந்தராஜைக் கைதுசெய்தனர்.

நிதி நிறுவனம்
நிதி நிறுவனம்

மோசடி செய்யப்பட்ட நகைளை உருக்கி, தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்திருப்பதாகவும், வேறு சிலரின் நகைகளை விற்றுவிட்டதாகவும் ஆனந்தராஜ் கூறியதாகத் தெரிகிறது. 

இதையடுத்து நிறுவனத்தின் மேலாளர் மாசிக், துணை மேலாளர்கள் சம்பத், ரவிச்சந்திரன், பாலு, பாஸ்கர் மற்றும் சிலரைத் தேடி வருவதாக பேரளம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி: 90 திருட்டுச் சம்பவங்கள்; கைரேகையைால் பிடிபட்ட கொள்ளையன்; 64 பவுன் தங்க நகை மீட்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு