Published:Updated:

``பலகாரத்தைக் கொடுத்துவிட்டு ரூ.3 கோடியுடன் மாயமாகிவிட்டனர்" - சீட்டு மோசடி குறித்து ஆட்சியரிடம் மனு

தீபாவளி சீட்டு மோசடி

தீபாவளிக்கு அடுத்த நாள் சீட்டுப் பணம் தருவதாகக் கூறியிருந்த குமார், பண்டிகைக்கு முந்தைய நாள் பலகாரத்துக்கான சீட்டை மட்டும் கொடுத்துவிட்டு ரூ.3 கோடி பணத்துடன் குடும்பத்துடன் மாயமாகிவிட்டார்.

திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த மக்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில், ``எங்கள் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக குமார் என்பவர் மளிகைக்கடை நடத்திவந்தார். குமார் மாத மற்றும் வாரத் தவணை அடிப்படையில் தீபாவளி, பொங்கல் சீட்டுகளை நடத்திவந்தார்.

நம்பிக்கையின் அடிப்படையில் பலரும் வாரம்தோறும் ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை தவணையாகச் செலுத்திவந்தோம். இந்நிலையில், தீபாவளிக்குப் பணத்தைத் தருவதாக குமார் தெரிவித்திருந்தார். பண்டிகைக்கு முந்தைய நாள் பலகாரத்துக்கான சீட்டை மட்டும் கொடுத்துவிட்டு ரூ.3 கோடி பணத்துடன் குடும்பத்துடன் மாயமாகிவிட்டார்.

குமாரிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள்
குமாரிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள்

அவரது செல்போனும், அவர் மனைவி செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரூ.3 கோடியுடன் மாயமான அவரைப் பிடித்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.