Published:Updated:

சேலம்: `இங்கே இருந்த டவரைக் காணோம்’ - அதிர்ந்த அதிகாரிகள்; எடைக்குப் போட்ட கும்பல்

டவரைத் திருடிய நபர்கள்

சில நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பராமரிப்புப் பணிக்காக செல்போன் டவர் அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்று பார்த்தபோது, இடம் வெறிச்சோடிக் கிடந்திருக்கிறது.

சேலம்: `இங்கே இருந்த டவரைக் காணோம்’ - அதிர்ந்த அதிகாரிகள்; எடைக்குப் போட்ட கும்பல்

சில நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பராமரிப்புப் பணிக்காக செல்போன் டவர் அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்று பார்த்தபோது, இடம் வெறிச்சோடிக் கிடந்திருக்கிறது.

Published:Updated:
டவரைத் திருடிய நபர்கள்

சேலம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் அங்கு வந்த கும்பல் ஒன்று, காவலாளியிடம் சில ஆவணங்களைக் காண்பித்து செல்போன் டவர் செயலற்றுப்போனதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் செல்போன் டவரை கிரேன் கொண்டு கழற்றி திருடிச் சென்றுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பராமரிப்புப் பணிக்காக செல்போன் டவர் அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்று பார்த்தபோது, இடம் வெறிச்சோடிக் கிடந்திருக்கிறது. இதனைக் கண்ட பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து, நிறுவனத்தின் மேலாளர் தமிழரசனிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு தமிழரசன் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ததில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த நாகமுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த சண்முகம், சேலம் மாவட்டம் வாழப்பாடி காமராஜர் நகரைச் சேர்ந்த ராகேஷ் சர்மா ஆகியோரைக் கைதுசெய்தனர்.

கைது
கைது

அவர்களிடமிருந்து 6.46 லட்சம் ரொக்கம் 9 டன் டவர் இரும்பு, ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை விருதுநகரில் பறிமுதல் செய்த போலீஸார் மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகளைத் தேடிவருகின்றனர்.

பிடிபட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், இது போன்று செல்போன் டவர்களை நோட்டமிட்டு திருடி வந்ததும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எடை மேடு பகுதியில் தனியார் வே-பிரிட்ஜில் எடை போட்டு அந்த எடை மேடையின் உரிமையாளரிடமே பொருள்களை விற்றதும் தெரியவந்தது. மீதமிருந்த இரும்புத் தளவாடங்களை கோவில்பட்டியைச் சேர்ந்த வியாபாரியிடம் விற்றதாக விசாரணையில் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.