Published:Updated:

ஹைதராபாத் என்கவுன்டர் விவகாரத்தில் மக்களின் மனநிலை என்ன? #VikatanPollResults

#DishaCase என்கவுன்டர்
#DishaCase என்கவுன்டர்

ஹைதராபாத் பெண் மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். `தெலங்கானா காவல்துறையின் இந்த நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

கடந்த வாரம் தெலங்கானாவில் ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிவா (20), சென்னகேசவலு (20), முகமது ஆரிஃப் (26), நவீன் (20) ஆகிய 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. நேற்று, இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது என்கவுன்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. `தெலங்கானா காவல்துறையின் இந்த நடவடிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?' என நேற்று வாசகர்களிடம் இணையம் மூலம் சர்வே எடுத்திருந்தோம். அதன் முடிவுகள்.

வாக்களித்துள்ள பெரும்பாலான மக்களின் கருத்து, காவல்துறையின் இந்த முடிவு `மிகச்சரியானது' என்பதே. ஒட்டுமொத்தமாக 69.78 சதவீதம் பேர் இந்த பதிலை தேர்வுசெய்திருக்கின்றனர்.

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் 

விகடனின் ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...

விகடனின் ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...
விகடனின் ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...

Vikatan Survey results
Vikatan Survey results
Vikatan Survey results
Vikatan Survey results

இந்த பெரும்பான்மை முடிவுகளுக்கு அடுத்தபடியாக அதிகம்பேர் தேர்வு செய்திருப்பது, `பணமிருந்தா விட்ருப்பாங்க' என்ற பதிலை. இந்த என்கவுன்டருக்கு மக்களின் பதில் என்ன என்பதைத் தாண்டி, இந்த இரண்டு பதில்களில் தெரிய வந்திருக்கும் இன்னொரு விஷயம், நம்முடைய விசாரணை மற்றும் நீதி பரிபாலன அமைப்புகளின் மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதே.

மிகக் குறைவாக 3.65 சதவீதம் பேர் மட்டுமே இந்த என்கவுன்டர், `மிகத் தவறானது' என்ற பதிலைத் தேர்வுசெய்திருக்கின்றன. இதேபோல வாசகர்கள் தெரிவித்திருக்கும் கமென்ட்களிலும் காவல்துறையின் செயலுக்கு பெரும் வரவேற்பே இருக்கிறது. மிகக் குறைவான பேர்தான் மாற்றுக்கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

வாசகர்கள் தெரிவித்துள்ள சில கமென்ட்ஸ் 

குற்றங்களைத் தடுக்க இயலாமல் திணறும் அரசின்மீது, மக்களின் கோபம் திரும்பிவிடாமல் இருக்க, காவல்துறையின் மூலம் நிகழ்த்தப்படுபவையே இதுபோன்ற என்கவுன்டர்கள் என்பதுதான் இந்த செயலை கண்டிப்பவர்களின் பொதுவான கருத்து. இந்த சர்வே முடிவுகளை வைத்து பார்க்கையில் இந்த என்கவுன்டரும் அதன் நோக்கத்தை அடைந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பான உங்களின் பிற கருத்துகளை கீழே கமென்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு