Published:Updated:

பெரம்பலூர்: பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை - அலுவலக கண்காணிப்பாளருக்கு எதிராக அதிரடி காட்டிய டிஐஜி

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெண் போலீஸாருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் போலீஸ் அலுவலகக் கண்காணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்: பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை - அலுவலக கண்காணிப்பாளருக்கு எதிராக அதிரடி காட்டிய டிஐஜி

பெண் போலீஸாருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் போலீஸ் அலுவலகக் கண்காணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2018-ம் முதல் அமைச்சுப் பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துவந்தார். அதைத் தொடர்ந்து அவர் போலீஸாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துவந்தார்.

பெரம்பலூர்
பெரம்பலூர்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த ஆயுதப்படையைச் சேர்ந்த திருமணமாகாத பெண் காவலர் ஒருவர், நிலுவையில் உள்ள ஊதியப் பிரச்னைகளைப் பெற்றுத்தர வேண்டி. ஹரிகரனை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

அதிலிருந்து அந்தப் பெண் போலீஸாருக்கு ஹரிகரன் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் சென்றதும், அதை உயரதிகாரிகளிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் அந்தப் பெண் போலீஸ். அதைத் தெரிந்துகொண்ட ஹரிகரன், `என்னைப் பற்றி உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தாயா?’ என்று கடுமையான வார்த்தைகளால் மிரட்டிவந்திருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண் போலீஸ் பெரம்பலூர் எஸ்.பி மணியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

அப்போதைய திருச்சி சரக டி.ஐ.ஜி ராதிகா விசாரணை நடத்தி, ஹரிகரனை புதுக்கோட்டை மாவட்டத்துக்குப் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், அவர் புதுக்கோட்டைக்குச் செல்ல மறுத்ததோடு மீண்டும் அதே இடத்துக்கு வருவேன் என்றும், அந்தப் பெண் காவலரை விட மாட்டேன் என்றும் சக போலீஸாரிடம் எச்சரிக்கும்விதமாகப் பேசியிருக்கிறார்.

பெண் போலீஸார்
பெண் போலீஸார்

இதனால் ஹரிகரன் துறைரீதியிலான நடவடிக்கையாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பாலியல் புகார் குறித்து விசாகாகுழு நடத்திய விசாரணையில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர், ஹரிகரனுக்குக் கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

போலீஸாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளர் ஹரிகரன்
போலீஸாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளர் ஹரிகரன்

பெரம்பலூர் காவல்துறை வரலாற்றில் அலுவலகக் கண்காணிப்பாளர் நிலையில் பதவியிலுள்ள ஒருவருக்குப் பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அதற்காகக் கட்டாய ஓய்வு தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

யார் இந்த ஹரிகரன் என்று பெரம்பலூர் போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஹரிகரன் பெண்கள் விவகாரத்தில் வீக். இவர், ஏற்கெனவே பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பெண் உதவியாளருக்குப் பாலியல்ரீதியிலான டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி
திருச்சி சரக டி.ஐ.ஜி

அந்தப் புகாரை விசாரித்த விசாகாகுழு இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை ஒத்திவைத்தது. மீண்டும் மற்றொரு பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகச் சிக்கிய வழக்கில்தான் டி.ஐ.ஜி சரவண சுந்தர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களிடமும்,பெண் போலீஸாரிடம் தவறாக நடந்துகொண்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்கிற நிலை வந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் குறையும்” என்கின்றனர் ஆவேசமாக.