Published:Updated:

`டிஸ்கவரி ரெஃபரென்ஸ்; பாகிஸ்தான் தொடர்பு! -வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த பெரம்பலூர் இளைஞர்

வன விலங்கு வேட்டையாடுதல்
வன விலங்கு வேட்டையாடுதல்

ஒரு விலங்குகளைப் பிடித்துவிட்டால் அதன் வீடியோவை அவர்களுடன் ஷேர் செய்துகொள்கிறார்கள் அப்படித்தான் `மெசேஞ்சர்' வாயிலாக `பாகிஸ்தான் ஹன்டிங் கிளப்'புடன் தொடர்பிலிருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாடி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார் பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்ததில் பாகிஸ்தானில் உள்ள `ஹன்டிங் கிளப்'புடன் 'மெசேஞ்சர்' வாயிலாக தொடர்பிலிருந்திருக்கிறார். பெரம்பலூரில் உள்ள இளைஞர் பாகிஸ்தானில் உள்ளவர்களிடம் தொடர்பிலிருந்தது எப்படி என்று போலீஸார் விசாரித்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன விலங்களை வேட்டையாடுதல்
வன விலங்களை வேட்டையாடுதல்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்தவர் கவிக்குமார். எம்.எஸ்ஸி பட்டதாரியான இவர், அப்பகுதியில் ப்ரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் நெடுங்கூர், காப்புக்காடு பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடி அதைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் செல்ல கவிக்குமாரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர்பாக ஏராளமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், அவர் பாகிஸ்தானில் உள்ள `ஹன்டிங் கிளப்'புடன் `மெசேஞ்சர்' வாயிலாக தொடர்பில் இருப்பது கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பாடாலூர் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டையில் கவிக்குமார்
வேட்டையில் கவிக்குமார்

கவிக்குமார் வேட்டையாடுவதற்காகத் துணையாக இருந்த அவரின் தாயாரும் ஆசிரியர் உள்ளிட்ட இருவரையும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. வழக்கை விசாரித்து வரும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.``பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 20,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தைச் சுற்றிலும் மலைச் சார்ந்த காடுகள் அதிகம் உள்ளதால் விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் உள்ளன.

இந்த நிலையில், கவிக்குமார் இப்பகுதியில் ப்ரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். மாலை நேரம் மற்றும் விடுமுறை நாள்களில் காடுகளில் வளரக்கூடிய வனவிலங்குகளை எப்படி வேட்டையாடுவது என்றும் அதை எப்படிச் சமைத்துச் சாப்பிடுவதும் என்றும் வில்ஜேஜ் ஹன்டர் என்ற பெயரில் யூடியூப் கணக்கு ஒன்றைத் தொடங்கி அதில் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க டிஸ்கவரியில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்திருக்கிறார்கள்.

வன விலங்கு வேட்டையாடுதல்
வன விலங்கு வேட்டையாடுதல்

அத்தோடு விலங்குகளைப் பிடிப்பதைப் படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இவர்களுக்கென்றே இணையத்தில் தனி குரூப் வைத்திருக்கிறார்கள். அதில், ஒரு விலங்குகளைப் பிடித்துவிட்டால் அதன் வீடியோவை அவர்களுடன் ஷேர் செய்துகொள்கிறார்கள் அப்படித்தான் 'மெசேஞ்சர்' வாயிலாக `பாகிஸ்தான் ஹன்டிங் கிளப்'புடன் தொடர்பிலிருந்ததாகவும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது செல்போன் மற்றும் கம்ப்யூட்டரை ஆய்வு செய்ததில், அவர் ஏராளமான வன உயிரினங்களை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. அதற்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தன. மேலும் அங்கு, வேட்டைக்குப் பயன்படுத்தும் `ஹெட்லைட்' உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து மேலும் அவரிடம் விசாரித்து வருகிறோம்” என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு