Published:Updated:

பெரம்பலூர்: மளிகைக்கடைக்குச் சென்றது குட்கா சோதனைக்கு... சிக்கியவையோ டெட்டனேட்டர் குச்சிகள்!

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

மளிகைக்கடையில் குட்கா விற்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து, போலீஸார் சோதனை செய்தபோது, 170 டெட்டனேட்டர் குச்சிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்: மளிகைக்கடைக்குச் சென்றது குட்கா சோதனைக்கு... சிக்கியவையோ டெட்டனேட்டர் குச்சிகள்!

மளிகைக்கடையில் குட்கா விற்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து, போலீஸார் சோதனை செய்தபோது, 170 டெட்டனேட்டர் குச்சிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் நாராயணசாமி. இவர், அந்தப் பகுதியில் மளிகைக்கடை நடத்திவருகிறார். இவரின் மகன் மகேந்திரன் மளிகைக்கடையில அப்பாவுக்கு உதவியாக இருந்துவருகிறார்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இந்நிலையில், நாராயணசாமியின் மளிகைக்கடையில் குட்கா விற்பனை செய்வதாக, பெரம்பலூர் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் அடிப்படையில் போலீஸார் மளிகைக்கடைக்குச் சென்று சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது, மளிகைக்கடையில் 170 டெட்டனேடர் குச்சிகளைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ந்துபோனார்கள். உடனே இது குறித்து பெரம்பலூர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர், போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து தந்தை, மகன் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திவருகிறார்கள். மளிகைக்கடைக்குள் டெட்டனேட்டர்கள் எப்படி வந்தன, ஏதேனும் நாச வேலைக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டார்களா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்

இது குறித்து வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கல்குவாரி நடத்திவந்தார். அவரின் கல்குவாரியில்தான் மகேந்திரன் வேலை பார்த்துவருகிறார்.

பெரம்பலூர் கல்குவாரி
பெரம்பலூர் கல்குவாரி

கடந்த மாதம் கல்குவாரியில் இருவர் உயிரிழந்த நிலையில், உரிமம் இல்லாத குவாரிகளை ஆட்சியர் மூட உத்தரவிட்ட நிலையில், ஜூலை 29-ம் தேதி கல்குவாரியை மூடிவிட்டார்கள். பாறையை வெடிவைத்துத் தகர்ப்பதற்காக வைத்திருந்த டெட்டனேட்டர்களை மகேந்திரன் கொண்டுவந்து அவரின் மளிகைக்கடையில் வைத்திருக்கிறார். அவ்வளவுதான். இருவரையும் அழைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.