Published:Updated:

மாதம்தோறும் வசூல் வேட்டை; பணம் கொடுக்க மறுத்த மருந்தக உரிமையாளர் கொலை - பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர்

ரெளடிகளுக்குப் பணம் தர மறுத்த மெடிக்கல் உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருக்கும் ரெளடிகளைக் கைதுசெய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாதம்தோறும் வசூல் வேட்டை; பணம் கொடுக்க மறுத்த மருந்தக உரிமையாளர் கொலை - பெரம்பலூரில் அதிர்ச்சி

ரெளடிகளுக்குப் பணம் தர மறுத்த மெடிக்கல் உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருக்கும் ரெளடிகளைக் கைதுசெய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Published:Updated:
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் சிவன் கோயில் தெருவில் நாகராஜன் (44) குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன், ரகுநாத் இருவரும் மாதா மாதம் மாமூல் பணம் கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன்பு இரண்டு பேரும் நாகராஜனிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்த நாகராஜன் அது தொடர்பாகப் பணம் கேட்டு மிரட்டிய பிரபாகரனின் தந்தையிடம் தகவலைச் சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நாகராஜனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த நாகராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதற்கிடையே நாகராஜனைத் தாக்கிக் கொலைசெய்த பிரபாகரன், ரகுநாத் இருவரும் தப்பியோடிவிட்டனர். நாகராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வந்திருந்த அவரின் உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பணம் கேட்டு அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இதையடுத்து தப்பியோடிய இரண்டு குற்றவாளிகளையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

அடித்துக் கொலை
அடித்துக் கொலை

என்ன நடந்தது என்று நாகராஜனின் உறவினர்கள் தரப்பில் பேசினோம். ``நாகராஜன் சிறிய அளவிலான மெடிக்கல் ஷாப் கடை ஒன்றை நடத்திவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையிலிருந்தபோது நாகராஜனை லாடபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மிரட்டி மாதா மாதம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையேல் இங்கு கடை நடத்த முடியாது என்று சொல்லி மிரட்டியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாகராஜன் சற்று பயந்த சுபாவம்கொண்டவர் என்பதை அறிந்துகொண்ட பிரபாகரன் அடிக்கடி மிரட்டி பணம் பறித்துள்ளார். இவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் பிரபாகரனின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகப் புகார் சொல்லியிருக்கிறார் நாகராஜன். இதனால் கடுப்பான அவர்கள், ``எங்க அப்பாகிட்டபோனா ஒண்ணும் நடக்காது. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மாவிட்டுட மாட்டோம்” என்று சொன்னதோடு மீண்டும் பணம் கேட்டு மிரட்ட, `என்னிடம் பணம் இல்லை. நீங்கள் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்கும் அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளு இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். `என்னிடமே குரலை உயர்த்தி பேசுறீயா?’ என்று கோபமடைந்த பிரபாகரன், அவரின் நண்பர் ரகுநாத் இருவரும் சேர்ந்து நாகராஜனை அடித்துள்ளனர்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது விரட்டி விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து நாகராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று (05-05-2022) அதிகாலை திடீரென ரத்த வாந்தி ஏடுத்தார். இதனால் மீண்டும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாகராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அவர்கள் இருவர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் ஆவேசமாக.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

இது குறித்து வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ”இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் மீது ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் தலைமறைவாகியுள்ளனர். விசாரித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு பேசுங்கள்” என்று முடித்துக்கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism