பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகள் செய்துவருகிறார். இவர் தன் உறவினரான முத்துசாமி என்பவரின் மனைவி மலர்க்கொடியின் உதவியுடன், அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண், அவரது வீட்டில் குளித்துக்கொண்டிருந்தபோது செல்போனில் வீடியோ எடுத்து அவரை மிரட்டத் தொடங்கியிருக்கிறார். ``உன் மகளை நான் காதலிக்கிறேன்.

தினமும் காலை, மாலை இரு வேளையும் அவரை என்னிடம் போனில் பேசவைக்க வேண்டும். நான் சொல்லும் இடத்துக்கு உன் மகளை அழைத்துவர வேண்டும். இல்லையென்றால், நீ பாத்ரூமில் குளிக்கும் வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன்" என்று செல்வம், கார்த்திகாவை மிரட்டியிருக்கிறார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதை, வெளியில் சொல்ல முடியாமல் தவித்துவந்திருக்கிறார் கார்த்திகா. ஒரு கட்டத்தில் செல்வம் கொடுக்கும் டார்ச்சரைத் தாங்க முடியாமல், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார் கார்த்திகா.

இது குறித்து வழக்கு பதிவுசெய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் செல்வத்தையும், அவருக்கு உதவியாக இருந்த அவர் உறவினரான மலர்க்கொடி என்பவரையும் போக்சோ, ஆபாச வீடியோ படம் எடுத்து மிரட்டுவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``செல்வத்துக்கு 33 வயது ஆகிறது. கார்த்திகாவின் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. அந்த மாணவியைக் காதலிப்பதாகவும்... தான் சொல்லும் இடத்துக்கெல்லாம் மாணவியை அழைத்து வர வேண்டும் என்றும் மாணவியின் அம்மா கார்த்திகாவைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். அவர்கள் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் புகார் கொடுத்திருக்கிறார் கார்த்திகா. அதன்பேரில் விசாரித்து, இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.