Published:Updated:

`உறவினர் வீட்டிலிருந்து 70 ரூபாய் எடுத்த சிறுமி' - ஆத்திரத்தில் சித்ரவதை செய்து கொன்ற தாய்!

பெரம்பலூர்
News
பெரம்பலூர்

சிறுமியைக் கண்டிக்க, நெருப்பில் வரமிளகாயைப் போட்டு அந்தப் புகையைக் கட்டாயப்படுத்தி முகரவைத்திருக்கிறார். மேலும் வாயிலும், வலது தொடையிலும் கம்பியைப் பழுக்கவைத்துச் சூடுவைத்திருக்கிறார்.

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் மனைவி மணிமேகலை. இந்தத் தம்பதிக்கு 10 வயதில் மகள் இருந்தார். வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தார். சிறுமி சரிவரப் பள்ளிக்குச் செல்லாமலும், வீட்டிலிருந்த பணத்தை எடுத்துச் செலவு செய்து வந்தததாகவும் கூறப்படுகிறது. இதனால் தாய் மணிமேகலை சிறுமியை அடிக்கடி கண்டித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம்
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம்

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி சிறுமியின் பெரியப்பா வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுமி, வீட்டுச் சமையல் அறையில் வைத்திருந்த 70 ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது பற்றி தாய் மணிமேகலைக்குத் தெரியவரவே அன்று மாலையே சிறுமியைக் கண்டிக்க நெருப்பில் வரமிளகாயைப் போட்டு, அந்த புகையைக் கட்டாயப்படுத்தி முகர வைத்திருக்கிறார். மேலும் வாயிலும், வலது தொடையிலும் சூட்டுக் கம்பியைப் பழுக்கவைத்துச் சூடு வைத்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்குச் சிறுமியின் அப்பாவும், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் நேற்று முன்தினம் 8-ம் தேதி சிறுமிக்கு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்திருக்கிறார்கள். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனையில் சிறுமியை உள்நோயாளியாகச் சேர்த்து சிகிச்சையளித்துவந்தனர்.

மருத்துவமனை இறப்பு
மருத்துவமனை இறப்பு

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று ( 9-ம் தேதி) சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் வழக்கு பதிவு செய்து, தாய் மணிமேகலை, உறவினர் மல்லிகா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள் செல்வி கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவரான வழக்கறிஞர் அய்யம்பெருமாள் தலைமையில், உறுப்பினர்களான டாக்டர் பழனிவேல், வழக்கறிஞர் சுரேஷ், விஜயந்தி அமுதா ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று 10-ம் தேதி வேப்பந்தட்டையில் நேரில் விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.