Published:Updated:

`காட்டில் பிறந்த குழந்தை; மறைத்த இளம்பெண்; ஓடோடி மீட்ட காவல்துறை!' - நடந்தது என்ன?

பெரம்பலூர்
News
பெரம்பலூர்

தன் தாயாரிடம் போனில் பேசிய பத்மா, தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் அடிக்கடி வலி ஏற்படுவதால் வாந்தி வருவதாகவும் பொய் சொல்லி மறைத்திருக்கிறார்.

பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. இவர் மனைவி ஷோபனா. இந்தத் தம்பதிக்கு பத்மா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மகள் இருக்கிறார். வீராசாமி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். ஷோபனா தன் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

இந்த நிலையில், தன் மகளை அழைத்துக்கொண்டு ஷோபனா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஊட்டிக்கு சென்றார். அங்கு தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து, தன் மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பத்மா மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அவரை மட்டும் ஷோபனா சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை (27) என்பவருக்கும், பத்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. இருவரும் நெருக்கமாக பழகியதால் பத்மா கர்ப்பமடைந்திருக்கிறார்.

பெரம்பலூர் போலீஸார்.
பெரம்பலூர் போலீஸார்.

பத்மா தான் கர்ப்பமாக இருந்ததை யாரிடமும் கூறாமல் மறைத்து வந்திருக்கிறார். ஆனால், நாளடைவில் அவர் கர்ப்பமாக இருப்பது அவர் உறவினர்களுக்கு தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, அவர்கள் ஊட்டியில் உள்ள அவரின் தாயாருக்கு போனில் தகவலை கூறியுள்ளனர். ஆனால், தன் தாயாரிடம் போனில் பேசிய பத்மா, தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் அடிக்கடி வலி ஏற்படுவதால் வாந்தி வருவதாகவும் பொய் சொல்லி மறைத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பத்மா இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தை பிறந்ததும் அழாமல் இருந்ததால் பத்மா குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். இதற்கிடையில் ரத்தப்போக்கும் அதிகமானதால் பத்மாவை அவர் உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தை
குழந்தை

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறந்து மூன்று முதல் நான்கு மணி நேரம் தான் ஆகியிருக்கும் எனச் சந்தேகப்பட்டு பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரணை நடத்தியதில் நடந்த விவகாரத்தைச் சொல்லியிருக்கிறார் பத்மா. பின்னர் குழந்தை பிறந்த இடத்திற்குச் செல்லும்போது அங்குக் குழந்தை அழுதவாறு இருந்திருக்கிறது.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

அதைக் கண்டு பதறிய போலீஸார் உடனே குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே மருத்துவமனையில் பத்மாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பத்மாவை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக உள்ள காதலன் ராஜதுரையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.