Published:Updated:

திண்டுக்கல்: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர் நீதிமன்றத்தில் சரண்!

சரணடைந்த சபா

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் சரணடைந்தார்.

திண்டுக்கல்: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர் நீதிமன்றத்தில் சரண்!

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் சரணடைந்தார்.

Published:Updated:
சரணடைந்த சபா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அரியமங்கலம் என்ற இடத்தில் 2019-ல் மணிகண்டன் என்பவர் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பழனிகுமார், வழிவிட்டான், அழகுமுருகன், முத்துமுருகன் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நேரில் சென்று ஆஜராகி கையெழுத்திட சென்று வந்தனர்.

சபாரத்தினம்
சபாரத்தினம்

அதன்படி, இவர்கள் அனைவரும் கடந்த 2021 டிசம்பரில் 10-ம் தேதி ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு அரசுப் பேருந்தில் சென்றனர். அப்போது பரமக்குடியை அடுத்த தெளிச்சாத்தநல்லூர், கமுதக்குடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தை வழிமறித்து பத்துக்கும் மேற்பட்டோர் 4 பேரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கில் போலீஸார் சந்தேகத்தின் பேரில் மதுரை மாவட்டம் சின்ன அனுப்பானடி சேர்ந்த சபா என்ற சபாரத்தினம் என்பவரை தேடிவந்தனர். மேலும் சபா என்ற சபாரத்தினம்மீது பல்வேறு வழக்குகள் மதுரை பரமக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்நிலையில் போலீஸார் தொடர்ந்து தேடி வருவதால் இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனக்கூறி சபா என்ற சபாரத்தினம் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3 மேஜிஸ்ட்ரேட் முன்பு சரணடைந்தார். அப்போது அவர், ``என்மீது பொய்யான வழக்குகளை மதுரை, பரமக்குடி போலீஸார் போட்டிருக்கின்றனர். என்னை போலீஸார் என்கவுன்டரில் கொலைசெய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிலிருந்து என்னை காப்பாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். அந்த மனு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது" எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் போலீஸார் தன்னை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பில்லாமல் தேடி வருவதால், நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவித்தார். இதையடுத்து குற்றவியல் நீதித்துறை நடுவர், சபா என்ற சபாரத்தினத்தை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சபாரத்தினம் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

சரண்
சரண்

கடந்த 2013-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மதுரையில் மு.க.அழகிரிக்கு நிகரான நபராகவும் அறியப்பட்டவர் பொட்டு சுரேஷ். இவர் மதுரையில் அவருடைய அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும்போது வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மதுரை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கிலும் சபாரத்தினம் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாரத்தினம்
சபாரத்தினம்

இது குறித்து சபாரத்தினம் தரப்பு வழக்கறிஞரிடம் பேசினோம். ``சபாரத்தினம்மீது போலீஸார் 4 கொலை வழக்குகள் உட்பட 12 பொய் வழக்குகளைப் பதிவுசெய்து போலி என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபாரத்தினத்தை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அதனடிப்படையில்தான் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் சபாரத்தினம் ஆஜராகியிருக்கிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism