Published:Updated:

கும்பகோணம்: இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு - தஞ்சாவூர் எஸ்.பி விசாரணை!

பெட்ரோல் குண்டுவீச்சு - போலீஸ் விசாரணை

கும்பகோணம், இந்து முன்னணி நிர்வாகி வீட்டில், என்ன காரணத்துக்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது... அதைச் செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கும்பகோணம்: இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு - தஞ்சாவூர் எஸ்.பி விசாரணை!

கும்பகோணம், இந்து முன்னணி நிர்வாகி வீட்டில், என்ன காரணத்துக்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது... அதைச் செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
பெட்ரோல் குண்டுவீச்சு - போலீஸ் விசாரணை

கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (38). இவருக்கு மாலதி (37) என்ற மனைவி, இனியன் (11) என்ற மகன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சக்கரபாணி, இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சக்கரபாணி தன் மனைவி, மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி
இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி

அப்போது வீட்டு வாசலில் வெடிச் சத்தம் கேட்டிருக்கிறது. அதிகாலை நேரத்தில் என்ன சத்தம் கேட்கிறது என சக்கரபாணி எழுந்து சென்று பார்த்திருக்கிறார். வீட்டு வாசலில், பெட்ரோல் பாட்டில், திரியுடன் உடைந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட  வீடு
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு

இது குறித்து இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் சக்கரபாணி தகவல் கொடுத்தார். இதையடுத்து பா.ஜ.க வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், கும்பகோணம் இந்து முன்னணிப் பொறுப்பாளர் வேதா உள்ளிட்ட நிர்வாகிகள் சக்கரபாணியின் வீட்டுக்கு முன்பு குவிந்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தியதுடன், உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி ரவளி பிரியா, ஏ.டி.எஸ்.பி சுவாமிநாதன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்குச் சென்று பார்வையிட்டதுடன் ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

என்ன காரணத்துக்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது... அதைச் செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து, அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. பாதுகாப்புப்பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.