Published:Updated:

`இளம்பெண்ணிடம் தகராறு செய்த ரௌடிகள்!' -தட்டிக் கேட்ட மதுரை காவலர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

பெட்ரோல்குண்டு வீச்சு
பெட்ரோல்குண்டு வீச்சு

காவலர் ஷாஜகானை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவரின் மகன் ஷாஜகான் சென்னை மாநகர காவல்துறையின் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். ரம்ஜான் பண்டிகை விடுமுறையில் இவர் மதுரை வந்திருந்தார். இன்று அதிகாலை குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தநிலையில் திடீரென அவர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

`நாட்டு வெடிகுண்டு, கத்தி, பழிக்குப்பழி!'- போலீஸைக் கதிகலக்கும் காஞ்சி கேங் வார்

உடனே பதறி எழுந்த காவலர் ஷாஜகானின் குடும்பத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு

சில நாள்களுக்கு முன் அப்பகுதியிலுள்ள ரௌடிகள் சிலர் பெண் ஒருவரிடம் வம்பு செய்ததாகவும் அதை தட்டிக் கேட்ட ஷாஜகான் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். இதனால் சம்பந்தப்பட்ட ரௌடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்தவர்கள், காவலர் ஷாஜகானை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெட்ரோல்குண்டு வீச்சு
பெட்ரோல்குண்டு வீச்சு

இதில், சந்தேகப்படும்படியான சிலரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆயுதப்படைக் காவலர் வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு