Published:Updated:

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை! - அதிமுக கிளைச் செயலாளரை கைது செய்த காவல்துறை

அதிமுக கிளை செயலாளர் தியாகராஜன்
அதிமுக கிளை செயலாளர் தியாகராஜன்

மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு வந்த தியாகராஜன், பாலியல் வன்கொடுமை செய்து உடல் பாகங்களை கடித்து துன்புறுத்தியுள்ளார்.

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த அதிமுக கிளை செயலாளரை போலீஸார் இரவு நேரத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அரியலூர்
அரியலூர்

அரியலூர் மாவட்டம், மண்ணூழி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் அதிமுக கிளை செயலாளராக இருப்பவர் தியாகராஜன். இவருக்கும் அதேபகுதியில் வசித்துவரும் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருமே ஒரே சமூகத்தினர் என்பதால் உறவினர்கள் இவர்கள் நட்பை பெரிதாக நினைக்கவில்லை.

இந்நிலையில் கார்த்திகா வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு வந்த தியாகராஜன், பாலியல் வன்கொடுமை செய்து உடல் பாகங்களை கடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கதறி அழுத கார்த்திகா,

அ.தி.மு.க கிளை செயலாளர் தியாகராஜன்
அ.தி.மு.க கிளை செயலாளர் தியாகராஜன்

இது குறித்து தனது பெற்றோரிடம் செய்கை மூலம் சொல்லியிருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்ணின் சகோதரர், இதுகுறித்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காயமடைந்த கார்த்திகா சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ்.ஐ ராஜவேல்
எஸ்.ஐ ராஜவேல்

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தியாகராஜனை தேடிவந்தனர். இதனிடையே, கயர்லாபாத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேலுக்கு, திருமானூர் அருகே உறவினர் வீட்டில் தியாகராஜன் பதுங்கியிருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து, அங்கு சென்று பதுங்கி இருந்த தியாகராஜனை இரவு நேரத்தில் அதிரடியாக கைது செய்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

``அவரையே திருமணம் செய்துகொள்கிறேன்!"- சிறார் வதை செய்த பாதிரியாருக்காக பாதிக்கப்பட்ட பெண் ஜாமின் மனு
அடுத்த கட்டுரைக்கு