Published:Updated:

``அமைச்சர் மூலமா உதவி கெடச்சும்... திமுக ஆளுங்க கொலை மிரட்டல் விடுறாங்க!" - கலங்கும் முதிய தம்பதி

ஞானாம்பாள் - அவர் கணவர்

``முதலமைச்சர் வரைக்கும் மனு கொடுத்து, 4 மாசம் அலைஞ்சு கடைய வச்சேன். இப்போ கடைய திறக்கக்கூடாதுனு அடிக்க வராங்க" எனக் கண்ணீர் வடிக்கிறார் விழிச்சவால் மாற்றுத்திறனாளி ஞானாம்பாள்.

``அமைச்சர் மூலமா உதவி கெடச்சும்... திமுக ஆளுங்க கொலை மிரட்டல் விடுறாங்க!" - கலங்கும் முதிய தம்பதி

``முதலமைச்சர் வரைக்கும் மனு கொடுத்து, 4 மாசம் அலைஞ்சு கடைய வச்சேன். இப்போ கடைய திறக்கக்கூடாதுனு அடிக்க வராங்க" எனக் கண்ணீர் வடிக்கிறார் விழிச்சவால் மாற்றுத்திறனாளி ஞானாம்பாள்.

Published:Updated:
ஞானாம்பாள் - அவர் கணவர்

சேலம், காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஞானாம்பாள் (55). விழிச்சவால் மாற்றுத்திறனாளியான இவர், மாநகரக் காவல் ஆணையரிடம் மனு ஒன்று அளிக்க வந்திருந்தார். அவரை நாம் தனியாக அழைத்துப் பேசினோம். கையிலிருந்த புகார் நகலை நம்மிடம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார். ``ஐயா நான் பெத்த 4 புள்ளைங்கள்ல 3 செத்து போச்சு. கடைசி காலத்துல என்னையும் என வீட்டுக்காரரையும் காப்பாத்துறதுக்கு வேற வழி தெரியாம, மாற்றுத்திறனாளி உதவி திட்டத்துல கடை ஏதும் அமைக்க உதவி கிடைக்குமானு முயற்சி செஞ்சேன். எங்க ஊருல உள்ளவங்க சிலர் முதலமைச்சர் நிறைய பேருக்கு உதவி பண்ணிட்டு வர்ராரு. நீயும் ஒரு மனு கொடு'னு சொன்னாங்க. அதனால 4 மாசத்துக்கு முன்னாடி சென்னையில முதலமைச்சர சந்தித்து மனு கொடுக்க நானும் என்னோட கணவரும் போயிருந்தோம். அங்க எங்கள பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் எங்களோட மனுவை வாங்கிப் பார்த்துட்டு, சேலம் அரசு மருத்துவமனை அருகே ஆவின் பூத் அமைத்து தர்றதா சொன்னார். நாங்களும் கண்டிப்பா உதவி கிடைக்கும்னு நம்பிக்கையில வந்துட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆவின் பாலகம்
ஆவின் பாலகம்

சரியா 2 மாசம் கழிச்சு ஒரு ஆர்டர் வந்துச்சு. அதுல ஆவின் பாலகம் அமைக்க வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுபோட்டுருக்குறதா இருந்துச்சு. ரொம்பவே சந்தோஷப் பட்டேன். அதன்மூலம் மாற்றுத்தினாளிகள் துறையிலிருந்து 50,000 ரூபாய் நிதி கொடுத்து உதவுனாங்க, நானும் கையில, காலுல இருந்ததெல்லாம் அடமானம் வச்சி இரும்புப் பெட்டி செஞ்சி மருத்துவமனை கேட் பக்கத்துல எனக்கு கொடுத்த இடத்துல வச்சேன்.

நான் கடை அமைப்பதை பார்த்துட்டு எதிரே கடை வைத்திருக்கும் தி.மு.க பிரமுகர் சிதம்பரம், `இங்க கடையிலாம் வைக்கக் கூடாது. யாரகேட்டு வைக்கிறீங்க!' என்று சத்தம்போட ஆரம்பிச்சிட்டாரு, நானும் அவர்கிட்ட அரசு அனுமதி வாங்கித்தான் கடை வைக்கிறேன்... சட்டத்திற்கு புறம்பாக நாங்க ஏதும் பண்ணலனு சொன்னேன். அதுக்கு அவர், `இங்க கடையெல்லாம் வைக்கக் கூடாது, இன்னைக்கு நீ கடை வெப்ப நாளைக்கு வேற ஒருத்தன் வந்து கடை போடுவான். இதனால எங்க வியாபாரம் கெட்டு போயிடும்'ன்னு சொல்லி கடைய பூட்டிட்டாரு. தி.மு.க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மேயருக்கெல்லாம் சொல்லி இன்னைக்கு கடை திறப்பு விழா வச்சிருந்தேன். அதுக்குள்ள தி.மு.க பிரமுகர் சிதம்பரம் அடியாள்களை வச்சு எங்கள தொரத்த ஆரம்பிச்சுட்டாரு... `யாராச்சும் கடை பக்கம் வந்தீங்கனா வெட்டிடுவேன்'னு கொலை மிரட்டல் வேறவிடுறாரு, ரொம்ப பயமா இருக்கு" எனக் கண்ணீருடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக தி.மு.க பிரமுகர் சிதம்பரத்திடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பேச மறுத்துவிட்டார்.

சேலத்தில் தி.மு.க அரசின் உத்தரவுக்கு எதிராக தி.மு.க பிரமுகர்களே செயல்பட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகச் சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜிடம் பேசினோம். ``ஆவின் பூத் அமைக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையிடம் என்.ஓ.சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஆவின் பூத் ஒதுக்கும்போது, அவர்களுக்கான சலுகைகளை உடனே செய்து தருகின்றோம். உரிய விசாரணையின் பேரில், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கடையைத் திறக்க வழிவகை செய்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism