Published:Updated:

OTP பயன்படுத்தி நூதன முறையில் பாலியல் தொழில்; அதிர்ச்சியில் ஹைதராபாத்!

அவர்கள் சொல்லும் பிளாட்டுக்கு சென்று அங்கிருக்கும் பாலியல் தொழிலாளிக்கு இந்த OTP காட்டினால் வாடிக்கையாளர் அனுமதிக்கப்படுகிறார்.

OTP பயன்படுத்தி நூதன முறையில் பாலியல் தொழில்; அதிர்ச்சியில் ஹைதராபாத்!

அவர்கள் சொல்லும் பிளாட்டுக்கு சென்று அங்கிருக்கும் பாலியல் தொழிலாளிக்கு இந்த OTP காட்டினால் வாடிக்கையாளர் அனுமதிக்கப்படுகிறார்.

Published:Updated:

ஹைதராபாத்தில் சிக்கியிருக்கும் பாலியல் தொழில் நடத்தும் தரகர்களின் செயல்பாடுகள் போலீஸையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நூதன முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்திருக்கும் இந்த குற்றச் செயலில் வாடிக்கையாளரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரையும் இணைப்பது OTP. One Time Password எனச் சொல்லப்படும் OTP பயனரின் உண்மைத் தன்மையை அறிய பயன்படுத்தப்படும் கடவுச்சொல். இணைய வங்கி சேவைகள், மின்னஞ்சல் லாகின் போன்றவற்றில் இதனை பார்த்திருப்போம். போலீஸ் விரிக்கிற வலையில் மாட்டி கொள்ளாமல் இருக்க, வாடிக்கையாளரின் செல்போனுக்கு தரகர் தரப்பில் இருந்து OTP அனுப்பப்படுகிறது. அவர்கள் சொல்லும் பிளாட்டுக்கு சென்று அங்கிருக்கும் பாலியல் தொழிலாளிக்கு இந்த OTP -ஐக் காட்டினால் வாடிக்கையாளர் அனுமதிக்கப்படுகிறார்.

கிரைம்
கிரைம்

தங்களுக்கு கிடைத்த தகவல் படி ரைடு நடத்திய போலீஸ் ஒரு பிளாட்டில் உகாண்டா நாட்டை சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அதில் மூன்று பாலியல் தொழிலாளிகளும் ஒரு வாடிக்கையாளரும் அடக்கம். ஓரிரவுக்கு 15,000 ரூபாய் தருவதாக வாடிக்கையாளர் ஒப்புக் கொண்ட பிறகு அவருக்கு அனுப்பப்படும் முகவரிக்கு சென்று OTP-ஐ காட்ட வேண்டும். இறுதியாக வாடிக்கையாளரின் மொபைலில் தங்களின் நம்பர்கள், குறுஞ்செய்திகள் போன்ற தகவல்களை அழித்து விடச் சொல்கிறார்கள். மாட்டிக்கொள்ளாமல் இருக்க இந்த நடைமுறை. சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தரகர்கள் டேட்டிங் ஆப் வழியாக வாடிக்கையாளரை தங்கள் வழிக்கு இழுக்கின்றனர். அதன் பிறகு இருவரும் தொடர்பு எண்களை பரிமாறிக் கொள்கின்றனர். இந்த வழக்கில் வாட்ஸ் அப் உரையாடல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு கூட வெளிநாட்டு ஆட்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அளவிலான ஒரு வழக்கு சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism