Published:Updated:

தூத்துக்குடி டு இலங்கை; வலி நிவாரண மாத்திரைகள் கடத்தத் திட்டம்; பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார்

பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள்

தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து படகில் சட்ட விரோதமாக இலங்கைக்குக் கடத்தவிருந்த 1,430 வலி நிவாரண மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி டு இலங்கை; வலி நிவாரண மாத்திரைகள் கடத்தத் திட்டம்; பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார்

தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து படகில் சட்ட விரோதமாக இலங்கைக்குக் கடத்தவிருந்த 1,430 வலி நிவாரண மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் 23 கடலோர கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைப் பகுதியிலிருந்து படகுகள் மூலம் கஞ்சா, தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள், கடல் அட்டை, விரலி மஞ்சள், ஏலக்காய், பீடி இலைகள் உள்ளிட்டவை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டுவருவது தொடர்கதையாகிவருகிறது.

க்யூ பிரிவு போலீஸார், மரைன் போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வந்தபோதிலும் சட்ட விரோதக் கடத்தல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்தவிருந்த ரூ.1.35 கோடி மதிப்பிலான 12 சாக்கு மூட்டைகளில் 450 கிலோ கஞ்சாவை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகு
பறிமுதல் செய்யப்பட்ட படகு

இந்த நிலையில், தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்படவிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ் மற்றும் சில போலீஸார் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடற்கரைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருத நாட்டுப்படகுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பதிவெண் இல்லாத நாட்டுப்படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில், 443 அட்டைகளில் 4,430 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். படகையும், மாத்திரைகளையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த மாத்திரைகளை இங்கிருந்து இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தாக போலீஸார் கூறியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள்
பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள்

படகிலிருந்து தப்பிச் சென்றவர்களையும் தேடிவருகின்றனர். இந்த மாத்திரைகள் நரம்புவலி , நடுக்கம், வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, ஓய்வற்ற கால் நோய், பதற்றக் கோளாறு ஆகிய பாதிப்புடையவர்களின் வலி நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறாரகள். கஞ்சா, புகையிலை, மஞ்சள், களைக்கொல்லி மருந்து ஆகியவை கடத்திவந்த நிலையில் தற்போது வலி நிவாரண மாத்திரைகளையும் கடத்துவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.