Published:Updated:

`தண்டனை உறுதி; தப்பிக்க முடியாது'- தீர்ப்புக்கு முன்பே தூக்கில் தொங்கிய காஞ்சிபுரம் நபர்

representational image
representational image

வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் வழக்கறிஞர்களிடம் விசாரித்திருக்கிறார் கோட்டீஸ்வரன். அப்போது ‘இப்போதுள்ள சூழலில் தண்டனை உறுதி. எப்படியும் தப்பிக்க முடியாது’ எனக் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனக்கு உறுதியாகத் தண்டனை கிடைக்கும் என நம்பியதால், குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருந்தது.

representational image
representational image

காஞ்சிபுரம் காவலன் கேட் அருகே உள்ள வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாளராக வேலை பார்த்துவந்துள்ளார். அதே பகுதியில் உள்ள 8 வயதுச் சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்தச் சிறுமியை அழைத்து திண்ணையில் வைத்துக்கொண்டு விளையாடியுள்ளார் கோட்டீஸ்வரன். பின்பு யாரும் தெருவில் இல்லாதபோது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்குச் சென்ற சிறுமி, உடல்நலம் சரியில்லை எனச் சொன்னதால் சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் சந்தேகமடைந்து நடந்த விவரங்களைச் சிறுமியிடம் கேட்டிருக்கிறார். அப்போது நடந்தவற்றைச் சொல்லி இருக்கிறார் அந்தச் சிறுமி. இதனையடுத்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோட்டீஸ்வரன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோட்டீஸ்வரன் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

representational image
representational image

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிறுமியின் பாலியல் வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது. வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் வழக்கறிஞர்களிடம் விசாரித்திருக்கிறார் கோட்டீஸ்வரன். அப்போது இப்போதுள்ள சூழலில் தண்டனை உறுதி. எப்படியும் தப்பிக்க முடியாது.’ எனச் சொல்லியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மனமுடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற கோட்டீஸ்வரன் நேற்று காலை தூக்கிட்டுக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு