Published:Updated:

புதுக்கோட்டை: பள்ளி மாணவியிடம் ஆபாசப் பேச்சு; அதிர்ச்சி ஆடியோ! -ஆசிரியர்மீது பாய்ந்த போக்சோ

இது பற்றி அந்த மாணவி, அவரின் பெற்றோரிடம் சொல்ல, மாணவியின் பெற்றோர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், கடந்த 16 ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் ஆபாச வார்த்தைகளில் பேசும் ஆடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் சண்முகநாதன் என்பவர் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். அந்தப் பள்ளியில் படிக்கும் ப்ளஸ் ஒன் மாணவி ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

இது பற்றி அந்த மாணவி அவருடைய பெற்றோரிடம் சொல்ல, மாணவியின் பெற்றோர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

தொலைபேசியில் ப்ளஸ் ஒன் மாணவியிடம், ஆசிரியர் பேசிய அந்த ஆடியோவில், ``நம்முடைய கிளாஸில் உள்ள மத்த பிள்ளைங்களெல்லாம் என்னோட ஸ்டூடன்ட் மட்டும்தான். ஆனால், நீ என்னுடைய உயிர். உன்னோட வாய்ஸ் கேட்டாலே எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?

போக்சோ வழக்கு: விடுவிக்கப்பட்ட குற்றவாளி; 7 ஆண்டுக்குப் பின் தண்டனை அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வீடியோ கால் போட்டா உன்னோட பக்கத்துல இருந்து பேசுற மாதிரி இருக்கும். உன்னோட முகத்தைப் பார்ப்பேன். உன்னோட முகத்தைப் பார்த்தால்தான் எனக்குப் புத்துணர்ச்சியாக இருக்கு” என்பது போன்று அந்த மாணவியிடம் தொலைபேசியிலேயே ஆசிரியர் சில்மிஷமாகப் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, அந்தத் தனியார் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆசிரியர் சண்முகநாதன் தலைமறைவாகியிருக்கிறார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் இது பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

புதுக்கோட்டை: பள்ளி மாணவியிடம் ஆபாசப் பேச்சு; அதிர்ச்சி ஆடியோ! -ஆசிரியர்மீது பாய்ந்த போக்சோ

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``ஆசிரியர் சண்முகநாதனின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், தொலைபேசி உரையாடலைவைத்து தற்போது விசாரணை நடந்துவருகிறது. நேரில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு ஏதும் கொடுத்தாரா, அவரால் வேறு மாணவிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆசிரியர் சண்முகநாதனைப் பிடித்து விசாரிக்கும்போது உண்மைகள் வெளிவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு