Published:Updated:

ஆவி விரட்டுவதாகக் கூறி சிறுமியை சிறார் வதை செய்த சாமியார்; துணை போன அம்மா கைது!

சிறுமியை சோதித்த சாமியார், சிறுமியின் தாதா ஆவி அவரை பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். ஆவியை விரட்டவேண்டுமானால் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் அந்த சாமியார் அச்சிறுமியின் அம்மாவிடம் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை அருகில் உள்ள பிவாண்டி என்ற இடத்தில் உள்ள நர்போலியில் வசிக்கும் 16 வயதுச் சிறுமிக்கு முதுகு வலி இருந்து வந்தது. இது குறித்து அச்சிறுமி தன் அம்மாவிடம் தெரிவித்தார். அவர் அம்மா மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், அருகில் உள்ள பத்காவ் என்ற கிராமத்தில் இருக்கும் சாமியார் சாந்தாராம் ஷெல்கே என்பவரிடம் அழைத்துச் சென்றார்.

சிறுமியை சோதித்த சாமியார், சிறுமியின் தந்தைவழி தாதாவின் ஆவி அவரை பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். ஆவியை விரட்டவேண்டுமானால் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் அந்த சாமியார் அச்சிறுமியின் அம்மாவிடம் தெரிவித்தார். அவரும் இதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)
மகளை சிறார் வதை செய்தவருக்கு ஜாமீன் கொடுக்க அனுமதித்த தாய்; அபராதம் விதித்த நீதிமன்றம்!

மேலும் அந்த சாமியார், அப்பூஜையை காட்டில் வைத்துதான் நடத்தவேண்டும் என்று தெரிவித்தார். இதனால் சிறுமியை அவரின் அம்மாவும், மற்றோர் உறவினரும் சேர்ந்து காட்டிற்கு அழைத்துச் சென்றனர். காட்டில் சாமியாரிடம் அச்சிறுமியை ஒப்படைத்துவிட்டு வந்தனர்.

சிறுமியை அழைத்துச் சென்ற சாமியார் அவரை சிறார் வதை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்ப முயன்றார்.

ஆனால் சாமியார் அச்சிறுமியைக் கட்டாயப்படுத்தி சிறார் வதைக்கு உள்ளாக்கி, பின்னர் சில பூஜைகள் செய்து அவர் அம்மாவிடம் ஒப்படைத்தார். சிறுமி தொடர்ந்து அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தார். அவரிடம் என்னவென்று கேட்டபோது நடந்த சம்பவம் குறித்து தன் அம்மாவிடம் தெரிவித்தார். உடனே இது குறித்து சாந்தாராமிற்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாந்தாராமை கைது செய்தனர்.

Arrest (Representational Image)
Arrest (Representational Image)
Image by OpenClipart-Vectors from Pixabay
சென்னை: மாயமான இரண்டு சிறுமிகள்; சிறார் வதை! - இரு வேறு சம்பவங்களில் போக்சோவில் கைதான இளைஞர்கள்

இந்தக் குற்றத்திற்குத் துணை போனதாக குழந்தையின் அம்மா மற்றும் உறவினரும் கைது செய்யப்பட்டு, போக்ஸோ, பில்லி சூனியத் தடுப்புச் சட்டம் மற்றும் மனித நரபலி தடுப்புத் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மூட நம்பிக்கைகளும், அதன் காரணமாக பில்லி சூனியம், நரபலி போன்ற குற்றங்களும் மலிந்திருக்கின்றன. எனவேதான், கடந்த 2013-ம் ஆண்டு பில்லி, சூனியம் வைக்கும் மந்திரவாதிகளுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கும் அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது மகாராஷ்டிரா அரசு. என்றாலும், இன்றுவரை அங்கு இந்த மூடநம்பிக்கை சார்ந்து மக்கள் ஏமாற்றப்படுவதும், அது தொடர்பான குற்றங்களும் குறைந்தபாடில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு