Published:Updated:

தீரன் பட பாணியில் நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை... பெரம்பலூரில் அதிர்ச்சி!

கொள்ளை

பெரம்பலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்கி, நகைகளைக் கொள்ளையடித்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தீரன் பட பாணியில் நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை... பெரம்பலூரில் அதிர்ச்சி!

பெரம்பலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்கி, நகைகளைக் கொள்ளையடித்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Published:Updated:
கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகேயுள்ள அம்மா பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடையின் பின்புறத்தில் வசிப்பவர் பாண்டியன். இவர் மகன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பாண்டியன் மனைவி ராஜலெட்சுமியுடன் தனியே வசித்து வருகிறார். மேலும், தன் கணவர் வெளிநாட்டில் இருப்பதால், பாண்டியனின் மகள் ரம்யாவும் அவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த ஐந்து பேர்கொண்ட கும்பல், உட்புறம் தாழிடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பாண்டியனை இரும்பு ராடால் தாக்கியிருக்கிறது.

கொள்ளை
கொள்ளை
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாண்டியனைத் தாக்கிய அந்த கும்பல், அவர் கையில் வைத்திருந்த செல்போன், கார் சாவியைப் பிடுங்கியிருக்கிறது. அப்போது, சத்தம் கேட்டு மேல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பாண்டியனின் மகள் ரம்யா எழுந்து கீழே வந்திருக்கிறார். அதையடுத்து, ``சத்தம் போட்டால் எல்லோரையும் கொன்றுவிடுவோம்..!" என அந்த கும்பல் ரம்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

அதையடுத்து, ரம்யா அணிந்திருந்த 5 சவரன் தாலிச்செயின், அவரது கையில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு வீட்டை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு வீட்டின் முன் நின்ற காரில் ஏறித் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

இது குறித்துத் தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism