Published:Updated:

லிஃப்ட் விபத்தில் மாணவர் உயிரிழந்த விவகாரம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளைத் தேடும் காவல்துறை!

ஜெயப்ரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம்

திருவள்ளூர் அருகே திருமண மண்டப லிஃப்ட்டில் ஏற்பட்ட விபத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா தேடப்பட்டுவருகிறார்.

லிஃப்ட் விபத்தில் மாணவர் உயிரிழந்த விவகாரம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளைத் தேடும் காவல்துறை!

திருவள்ளூர் அருகே திருமண மண்டப லிஃப்ட்டில் ஏற்பட்ட விபத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா தேடப்பட்டுவருகிறார்.

Published:Updated:
ஜெயப்ரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம்

திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்தத் திருமண மண்டபத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

இந்தத் திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உணவு பரிமாறும் வேலைக்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த 11 வகுப்பு மாணவர் ஒருவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் (23), விக்னேஷ் (21) ஆகியோர் லிஃப்டில் இரண்டாவது மாடிக்குப் பெரிய பாத்திரங்களில் உணவைக் கொண்டு சென்றுள்ளனர்.

ஜெயப்ரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம்
ஜெயப்ரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம்

அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்டின் இரும்பு ரோப் கயிறு அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தலை நசுங்கி உயிரிழந்தார். லிஃப்டிலிருந்த மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

லிஃப்டில் மாணவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

இந்த விபத்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயப்பிரியா, திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் ஆகிய 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, 3 பேரைக் கைது செய்திருக்கிறது. இதில் தலைமறைவாகியுள்ள ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை போலீஸார் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism