Published:Updated:

அரியலூர்: அம்மன் கழுத்திலிருந்த தாலி, வெள்ளி கிரீடம் கொள்ளை! - போலீஸ் விசாரணை

தாலி, வெள்ளி கிரீடம் கொள்ளை

அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கும் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மன் கோயில்
அம்மன் கோயில்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தொட்டிகுளம் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இப்பகுதியில் உள்ள இந்த அம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மன் கோயில்
அம்மன் கோயில்

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் கோயில் பூசாரி பாவாடை என்பவர் கோயில் விளக்குகளைப் போட்டுவிட்டு பூட்டிச் சென்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று காலை 8 மணியளவில் கோயில் விளக்குகளை அணைத்துச் செல்ல வந்தபோது, கோயில் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பொதுமக்கள் மூலம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

உண்டியல்
உண்டியல்

பின்பு கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தாலி, 250 கிராம் வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியலைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அம்மன் கோயில்
அம்மன் கோயில்

கோயில் உண்டியலில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். இந்தச் சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் நான்கு கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இரண்டு நாள்களுக்கு முன்புகூட ஜவுளி வியாபாரி வீட்டில் ஒன்பது லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகள் மற்றும் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

இன்று வரையிலும் அந்த கொள்ளைச் சம்பவம் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போலீஸ் அல்லாடும் நிலையில், இன்னொரு திருட்டு சம்பவம் நடந்திருப்பதால் அரியலூர் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.