Published:Updated:

உசிலம்பட்டி: பெண் சிசுக்கொலை? தம்பதி தலைமறைவு! - போலீஸார் தீவிர விசாரணை!

சிசுக்கொலை
News
சிசுக்கொலை ( சித்தரிப்புப் படம் )

கடந்த 26-ம் தேதி காலையில் உயிரிழந்து விட்டதாகவும், அதை கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டின் அருகிலேயே புதைத்துவிட்டதாகவும், அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

உசிலம்பட்டி அருகே, பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 21-ம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கௌசல்யாவுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

பெரியகட்டளை
பெரியகட்டளை

குழந்தை பிறந்து 6 நாள்களே ஆன நிலையில், தங்கள் குழந்தை உடல்நலக் குறைவால் கடந்த 26-ம் தேதி காலையில் உயிரிழந்து விட்டதாகவும், அதை கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டின் அருகிலேயே புதைத்துவிட்டதாகவும், அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியரிடம், முன்னுக்குப் பின் முரணான பதில்களை கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதியினர் தெரிவித்ததால் சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்திருக்கிறார்.

முத்துப்பாண்டி வீட்டில் போலிஸ் விசாரணை
முத்துப்பாண்டி வீட்டில் போலிஸ் விசாரணை

அதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் விசாரித்தபோது அவரிடமும் தம்பதி முறையாக பதிலளிக்காமல் இருந்திருக்கின்றனர். அதனால், சந்தேகமடைந்த அவர், இது தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி - கௌசல்யாவை விசாரிக்க அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அவர்கள் அங்கிருந்து தலைமறைவானது தெரியவந்தது. இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியதால், போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிசுக்கொலை
சிசுக்கொலை
சித்தரிப்புப் படம்

அவர்களை பிடித்து விசாரித்தால்தான் பெண் சிசுக்கொலை நடந்ததா இல்லையா என்பது தெரிய வரும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். பலவருடங்களுக்கு முன்பு வரை உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரங்கேறிக்கொண்டிருந்த, `பெண் சிசுக்கொலை' எனும் கொடுமையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சமயத்தில் `தொட்டில் குழந்தை திட்டம்' உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை கொண்டுவந்து தடுத்து நிறுத்தினார்.

ஆனாலும், தெரிந்தும் தெரியாமலும் இந்த கொடிய பழக்கம் இன்னும் பல பகுதிகளில் தொடர்வதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு செக்கானூரணியிலும், சோழவந்தானிலும் நடந்த சிசுக்கொலைகள் நடந்த நிலையில், பெரிய கட்டளையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.