Published:Updated:

"என் காதலனுடன் இருந்தபோது ஆசிட் வீசிவிட்டனர்!"- முன்னாள் கணவன், முன்னாள் காதலன்மீது இளம்பெண் புகார்

இளம்பெண் புகார்

வேறு ஒருவருடன் வாழ்ந்துவந்த மனைவிமீது ஆசிட் வீசிய கணவனை போலீஸார் தேடிவருகின்றனர்.

"என் காதலனுடன் இருந்தபோது ஆசிட் வீசிவிட்டனர்!"- முன்னாள் கணவன், முன்னாள் காதலன்மீது இளம்பெண் புகார்

வேறு ஒருவருடன் வாழ்ந்துவந்த மனைவிமீது ஆசிட் வீசிய கணவனை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
இளம்பெண் புகார்

மும்பை அருகிலுள்ள நாலாசோபாராவில் வசிப்பவர் சனா (20) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தனது வீட்டில் திருமணம் செய்யாமல் கலாம் கான் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்தார். இந்த நிலையில், இரவில் இவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக இருவர் மீதும் ஆசிட் வீசப்பட்டது. இதில் இரண்டு பேரின் முகம், கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தனர். சனா இது குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார். அவர் போலீஸில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், ``நான் கடந்த ஆண்டு தபீக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு காட்கோபரில் வசித்துவந்தேன். ஆனால், என்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தபீக் அடித்து உதைத்தார். இதனால் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவரைவிட்டு வந்துவிட்டேன்.

காயம்
காயம்

அதன் பிறகு கம்ரான் அன்சாரி என்பவரைச் சந்தித்தேன். அவரும் காட்கோபரைச் சேர்ந்தவர்தான். அவருடன் எனக்குக் காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தேன். அன்சாரியும், தபீக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். ஆனால், அன்சாரி என்னைத் திருமணம் செய்யாமல் இழுத்தடித்தார். இதனால் அவரை விட்டுவிட்டேன். அதன் பிறகு நாலாசோபாராவைச் சேர்ந்த கலாம் கான் என்பவரைச் சந்தித்தேன். அவருடன் காதல் ஏற்பட்டதால் அவருடன் கடந்த சில மாதங்களாகச் சேர்ந்து வாழ்கிறேன். கலாம் கானைப் பற்றி அன்சாரி, தபீக்குக்குத் தெரியாது. நான் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்வது குறித்துத் தெரிந்தவுடன் எங்களது வீட்டுக்கு இருவரும் வந்து என்னுடனும், கலாம் கானுடன் சண்டையிட்டதோடு எங்களை மிரட்டிவிட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும்தான் நாங்கள் தூக்கிக்கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக எங்கள் மீது ஆசிட் வீசிச் சென்றிருக்கின்றனர்" என்று தெரிவித்தார். சனா புகார் தெரிவித்த இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.