Published:Updated:

`அடிவாங்கியபோது உதவிக்கு வராத மனைவி'- கோபத்தில் கணவன் செய்த கொடூரம்!

அவருடைய மனைவி, தன் அம்மா வீட்டுக்குக் குழந்தைகளுடன் சென்றிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை விராரில் வசிப்பவர் ஜெகதீஷ். இவரின் மனைவி சுஷ்மிதா. ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வரும் ஜெகதீஷ், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டில் மனைவி இல்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரரின் துணி ஜெகதீஷ் வீட்டுக்கு அருகில் உலரவைக்கப்பட்டிருந்தது. இதனால் கோபமான ஜெகதீஷ் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து, ``ஏன் எனது வீட்டுக்கு அருகில் துணியைக் காயவைத்திருக்கிறாய்?" என்று கேட்டுத் தகராறு செய்தார். இந்தத் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் ஜெகதீஷை அடித்துவிட்டார். ஜெகதீஷ் உதவிக்குத் தன் மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வரவில்லை. அவருடைய மனைவி, தன் அம்மா வீட்டுக்குக் குழந்தைகளுடன் சென்றிருந்தார். இதனால் கோபத்தில் ஜெகதீஷ் தன் மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியுடன் சண்டையிட்டதோடு அவரது தலையைப் பிடித்து சுவரில் முட்டவைத்திருக்கிறார்; வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து மனைவியைப் பல முறை குத்தினார்.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்
குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!

இதைத் தடுக்க வந்த மாமியாரையும் தாக்கினார். ஜெகதீஷின் மனைவி தன் குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. இதை ஜெகதீஷின் மூன்று குழந்தைகள் நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர். மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் ஜெகதீஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுஷ்மிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் சுஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெகதீஷைத் தேடிவருகின்றனர். ஜெகதீஷ் மீது கொலை, கொலை முயற்சி என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு