Published:Updated:

`கடையில் நிற்காதே! போய்ப் படி' கண்டித்த தந்தையைத் துப்பாக்கியால் சுட்ட 19 வயது மகன்!

சித்திரிப்புப் படம்
News
சித்திரிப்புப் படம்

லக்னோவில் படிக்கச் சொன்ன தந்தையைக் கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட மகனை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:

`கடையில் நிற்காதே! போய்ப் படி' கண்டித்த தந்தையைத் துப்பாக்கியால் சுட்ட 19 வயது மகன்!

லக்னோவில் படிக்கச் சொன்ன தந்தையைக் கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட மகனை போலீஸார் தேடிவருகின்றனர்.

சித்திரிப்புப் படம்
News
சித்திரிப்புப் படம்

லக்னோவில் 10-ம் வகுப்பு படிக்கும் அமன் யாதவ் என்ற மாணவன், சமீபத்தில் நடந்த தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தான். அவன் தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தான். காலையில் நடைப்பயிற்சிக்கு சென்ற அவனுடைய தந்தை அகிலேஷ், தன் மகன் கடையில் நிற்பதைப் பார்த்து தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததைச் சொல்லிக் கண்டித்திருக்கிறார்.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

நண்பர்கள் முன்னிலையில் தன்னைக் கண்டித்ததால் கோபமடைந்த அமன் நேராக தனது வீட்டுக்குச் சென்றார். தன் தந்தை வீட்டுக்கு வருவதற்கு முன்பாக வீட்டுக்குள் வந்து வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து, வீட்டுக்குள் நுழைய முயன்ற தந்தையைச் சுட்டார். தோட்டா அகிலேஷ் தோள்பட்டையில் பாய்ந்தது. இதில் அகிலேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்த அமன் துப்பாக்கியை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அகிலேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பி ஓடிய அமனைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். அகிலேஷை உறவினர்களின் வீடுகளில் தேடிவருகின்றனர். அகிலேஷ் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிவருகிறார். எனவே, தனது பெயரில் துப்பாக்கி ஒன்றை வாங்கி வீட்டில் வைத்திருந்தார் என்று போலீஸ் உதவி கமிஷனர் காஜிம் தெரிவித்தார். மேலும், அமனைப் பிடிக்க அவருடைய உறவினர்களின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.