Published:Updated:

`அடுக்குமாடிக் குடியிருப்பில் கைவரிசை காட்டிய அரை நிர்வாண கொள்ளையர்கள்..!' - போலீஸ் தீவிர விசாரணை

அரை நிர்வாண கொள்ளையர்கள்

தாம்பரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் அரை நிர்வாண கோலத்தில் நுழைந்த கொள்ளையர்கள், 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

`அடுக்குமாடிக் குடியிருப்பில் கைவரிசை காட்டிய அரை நிர்வாண கொள்ளையர்கள்..!' - போலீஸ் தீவிர விசாரணை

தாம்பரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் அரை நிர்வாண கோலத்தில் நுழைந்த கொள்ளையர்கள், 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Published:Updated:
அரை நிர்வாண கொள்ளையர்கள்

சென்னை, தாம்பரத்தில் சி.டி.ஓ காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் சஜீஸ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் ஆவடியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சஜீஸ்குமார் சென்றுள்ளார். அப்போது, அவரின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அஜீஸ்குமாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த அவர், அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தார்.

திருடர்கள்
திருடர்கள்

கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 சவரன் தங்க நகைகள், பத்தாயிரம் ரூபாய், பைக் ஆகியவை கொள்ளைப் போயிருந்தன. அப்போது சஜீஸ்குமார், வீட்டிலிருந்த சூட்கேஸை திறந்து பார்த்தார். அதில் அவர் வைத்திருந்த 100 சவரன் தங்க நகைகள் அப்படியே இருந்தன. அதனால் நிம்மதியடைந்த அவர், தாம்பரம் காவல் நிலையத்தில் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளைப்போனது தொடர்பாக புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தடய அறிவியல் துறையினர் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சி.சி.டி.வி-யில் அரை நிர்வாண கோலத்தில் இரண்டு நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதில் ஒருவன் தன்னுடைய முகத்தை மறைத்திருந்தான். இன்னொருவரின் முகம் தெளிவாக தெரிந்தது. கொள்ளையடிக்கும் சமயத்தில் இருவரும் கலந்தாலோசிக்கும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. தங்க நகைகள், பணம், பைக் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. அதனடிப்படையில் போலீஸார் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

கொள்ளையன்
கொள்ளையன்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 1-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கொள்ளையர்கள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து ஒவ்வொரு வீடாக நோட்டமிடுகின்றனர். பின்னர் சஜீஸ்குமார் வீட்டின் பூட்டை சத்தமில்லாமல் உடைத்து உள்ளே செல்கின்றனர். அவர்கள் இருவரும் சட்டை அணியவில்லை. சஜீஸ்குமாரின் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு அவரின் வீட்டின் அருகில் உள்ள வீடுகளின் பூட்டை வெளிபக்கமாக கொள்ளையர்கள் பூட்டும் காட்சியும் சி.சி.டி.வி-யில் பதிவாகியிருக்கிறது. பூட்டை உடைக்க கையில் கம்பிகளையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர். அரை நிர்வாண கோலத்தில் திருடும் கொள்ளையர்களின் விவரங்களைச் சேகரித்துவருகிறோம். விரைவில் கொள்ளையர்களைக் கைதுசெய்து நகைகளைப் பறிமுதல் செய்வோம்."