Published:Updated:

`தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்

நாட்டுத் துப்பாக்கி - கஞ்சா
நாட்டுத் துப்பாக்கி - கஞ்சா

போலீஸாரின் சோதனையில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் 2 அடி நீளம் கொண்ட வாள் ஆகியவை சிக்கின. மேலும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் போலீஸார் கைப்பற்றினர்.

ராமநாதபுரம் போலீஸாரால் பல்வேறு வழக்குகள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் வீட்டில் இருந்து நாட்டுத்துப்பாக்கி, வாள், கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுத் துப்பாக்கி மற்றும் கஞ்சா
நாட்டுத் துப்பாக்கி மற்றும் கஞ்சா

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது கீழத்தூவல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சபரி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் ஆஜராகாமல் இருந்ததுடன், போலீஸாருக்கு சவால்விடும் வகையில் சுற்றித் திரிந்துள்ளார்.

இதையடுத்து கீழத்தூவல் கிராமத்தில் உள்ள சபரியின் வீட்டுக்குச் சென்ற குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் 2 அடி நீளம் கொண்ட வாள் ஆகியவை சிக்கின. மேலும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ கஞ்சாவையும் போலீஸார் கைப்பற்றினர்.

போலீஸாரிடம் சிக்கிய சபரி
போலீஸாரிடம் சிக்கிய சபரி

இதையடுத்து வீட்டில் இருந்த சபரியைக் கைது செய்த போலீஸார் கீழத்தூவல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு சபரி மீது துப்பாக்கி, வாள் மற்றும் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபகாலமாக நாட்டுத் துப்பாக்கியுடன் குற்றவாளிகள் சிக்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் கமுதி பகுதியிலும் கடந்த வாரம் அழகன்குளம் பகுதியிலும் நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு