Published:Updated:

வீடு வாடகைக்கு கேட்பது போல் ஆக்ட்; மூதாட்டியிடம் செயினைப் பறித்த பெண் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

மூதாட்டியிடம் செயினைப் பறித்த பெண்

மூதாட்டியிடம் 5 சவரன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பிய பெண்ணை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

வீடு வாடகைக்கு கேட்பது போல் ஆக்ட்; மூதாட்டியிடம் செயினைப் பறித்த பெண் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

மூதாட்டியிடம் 5 சவரன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பிய பெண்ணை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

Published:Updated:
மூதாட்டியிடம் செயினைப் பறித்த பெண்

அருப்புக்கோட்டை அருகே ஜெயராம் நகரை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீமன்நாரயணசாமி (77). இவருடைய மனைவி தனலட்சுமி (76) ஓய்வுப்பெற்ற ஆசிரியை. இந்தத் தம்பதியரின் மகன் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். ஓய்வுபெற்றதையொட்டி, ஸ்ரீமன்நாராயணசாமியும், தனலட்சுமியும் மீனாட்சிபுரத்தில் தனியே ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று, தனலட்சுமியை சந்திக்க வந்த பெண் ஒருவர், தான் அரசுத்துறையில் வேலை செய்வதாகவும், தனக்கு இந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு வேண்டுமெனவும் கேட்டுள்ளார். ஆனால், வந்த பெண்ணின் பேச்சும் நடவடிக்கையும் தனலட்சுமிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உஷாராகிக்கொண்ட அவர், பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கைது
கைது

அந்தசமயம் வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு தெரிந்துகொண்ட அப்பெண், தான் வைத்திருந்த ஒருவிதமான ஸ்பிரேயை அவர் முகத்தில் தெளிக்க முயன்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் 'சடாரென' தனலட்சுமி தன் முகத்தை திருப்பிக்கொண்டதால் அவர் கழுத்தில் அந்த ஸ்பிரே தெளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கநகையை பறித்துக்கொண்டு அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இதையடுத்து தனலட்சுமி சத்தம் போடவும் ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பியோடிய பெண்ணை மடக்கிப்பிடித்தனர்.

பெண் கைது
பெண் கைது

இது குறித்த தகவல் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸூக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிடிப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்தப் பெண் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து தங்கநகைகளை மீட்ட போலீஸார், அதை தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பிடிப்பட்ட முருகேஸ்வரியை காவல் நிலையம் அழைத்துச்சென்று அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டையில், பட்டப்பகலில் ஒய்வுப்பெற்ற ஆசிரியையிடம் தங்கநகை பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.