அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவர், வீட்டு வேலைக்குக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றிருக்கிறார். சாந்தா அந்தச் சிறுமியை கீழப்பழுவூரைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து சிறுமியை அவர் பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேல் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்ற சாந்தா அவரை கீழப்பழுவூரைச் சேர்ந்த சந்திரா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்திரா அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார். இதற்குச் சாந்தா உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த வினோத், பிரேம், பாலு தனவேல் ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள். கூட்டுப் பாலியல் சம்பவம் ஏதுவும் நடந்துள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அமிர்தராயன் கோட்டையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி இந்திரா என்பவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர். விசாரணையில், இந்திரா சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக மூன்று நாள்கள் தனது வீட்டில் தங்க வைத்து, அவரை மூளைச் சலவை செய்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.