சென்னையை அடுத்துள்ள ஆவடியைச் சேர்த்தவர் 60 வயதான தங்கபாண்டியன். கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சொந்த ஊரான திருவண்ணாமலை சென்றுவிட்டு, கோயம்பேடு வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தங்கபாண்டியனை வழிமறித்துத் தாக்கி அவரிடமிருந்த செல்போன், பணத்தைப் பறித்துத் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக, கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். வழிப்பறி நடைபெற்ற பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்(23), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது(42), என்பது தெரியவந்தது. இவர்கள் பகல் நேரங்களில் ஒட்டலில் வேலை செய்துவிட்டு, இரவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாகச் செல்லும் நபர்களைத் தாக்கி அவர்களிடமிருந்து பணம், செல்போன் பறித்து வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரிடமிருந்தும் செல்போனைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.