Published:Updated:

சென்னை: டாஸ்மாக் கடையில் நடந்த மோதல்; பழிக்குப் பழியாக நடுரோட்டில் நடந்த கொலை!

சென்னையில் டாஸ்மாக் கடையில் நடந்த மோதலுக்குப் பழிக்குப் பழியாக இரும்புக்கம்பியால் அடித்து ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தலையில் காயங்களுடன் ஒருவர் இறந்துகிடப்பதாகத் தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனடியாக உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

நெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல்! - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?
சிசிடிவி
சிசிடிவி

அப்போது மூன்று பேர் சேர்ந்து இரும்புக்கம்பியால் தாக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜாபர் (55) எனத் தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது செல்வம், மகேஷ், சரவணனன் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் பிளாட்பாரங்களில் வசிப்பவர்கள். கடந்த வாரம் ஜாபருக்கும் செல்வம், மகேஷ், சரவணன் ஆகியோருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கும்போது மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் நேற்றிரவு பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஜாபரை இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்திருக்கின்றனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு