Published:Updated:

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; பள்ளி வேன்மீது வீசிய மாணவர்கள் கைது! - என்ன நடந்தது?

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, பள்ளி வேன்மீது வீசி சோதனை செய்த நான்கு மாணவர்களை அதிரடியாக கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; பள்ளி வேன்மீது வீசிய மாணவர்கள் கைது! - என்ன நடந்தது?

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, பள்ளி வேன்மீது வீசி சோதனை செய்த நான்கு மாணவர்களை அதிரடியாக கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

Published:Updated:
யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு

புதுச்சேரி, சாந்தி நகர் விரிவு 2-வது குறுக்குத் தெரு குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அதனால் வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியில்வந்து பார்த்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த பள்ளி வேனின் கண்ணாடி நொறுங்கிக் கிடந்தது, அதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் உருளையன்பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில இருந்தன. அதனால், நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; பள்ளி வேன்மீது வீசிய மாணவர்கள் கைது! - என்ன நடந்தது?

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள், வெடிமருந்தைத் தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளிலிருந்த எட்டு கேமராக்களை சோதனையிட்டதில் ஆறு சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்றதும், நடந்து சென்றதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான ஆறு சிறுவர்களின் அடையாளங்களைக்கொண்டு போலீஸார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இறுதியில் அவர்கள், கண் டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதில் 4 பேரை போலீஸார் நேற்றிரவே கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என யூடியூபில் பார்த்திருக்கின்றனர். அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என அவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. உடனே அதைப் பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகளைச் சுற்றி இரண்டு வெடிகுண்டுகளைத் தயாரித்திருக்கின்றனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசிப் பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்திருக்கிறது. மற்றொரு வெடிகுண்டை வீசியபோதுதான் சத்தத்துடன் வெடித்திருக்கிறது.

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; பள்ளி வேன்மீது வீசிய மாணவர்கள் கைது! - என்ன நடந்தது?

இதையடுத்து, நான்கு பேரையும் போலீஸார் மீட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் இரண்டு சிறுவர்களைத் தேடிவருகின்றனர். வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட இந்த ஆறு சிறுவர்களில் ஐந்து சிறுவர்களின் குடும்பத்தினர் எந்தக் குற்றப் பின்னணியிலும் தொடர்பில்லாதவர்கள். ஒரு சிறுவனின் தந்தை மட்டும் சில வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. குற்றச் செயலுக்காக தாங்கள் வெடிகுண்டை தயாரிக்கவில்லை என்றும், கெத்து காட்டுவதற்காக தயாரித்ததாகவும் மாணவர்கள் கூறியிருக்கின்றனர். ஆயினும் வேறு யாருக்காவது இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.