Published:Updated:

தூத்துக்குடி: தனியார் நிறுவன செல்போன் டவரைப் பிரித்து திருடிய 4 பேர்! - மடக்கிப் பிடித்த போலீஸார்

கைது செய்யப்பட்ட 4 பேர்

தூத்துக்குடியில் தனியார் நிறுவன செல்போன் டவரிலிருந்து அதன் பாகங்களை திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள், 2 பைக்குகள், ஒரு லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி: தனியார் நிறுவன செல்போன் டவரைப் பிரித்து திருடிய 4 பேர்! - மடக்கிப் பிடித்த போலீஸார்

தூத்துக்குடியில் தனியார் நிறுவன செல்போன் டவரிலிருந்து அதன் பாகங்களை திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள், 2 பைக்குகள், ஒரு லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Published:Updated:
கைது செய்யப்பட்ட 4 பேர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கழுகாசலபுரம் கிராமத்தில் அழகிரிசாமி என்பவருக்குச் சொந்தமான இடத்தில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாத வாடகையில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் டவரின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, மற்றொரு நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரியும் ஜாகிர் உசேன், செல்போன் டவர்களை கண்காணிப்பதற்காக கழுகாசலபுரம் பகுதிக்கு வந்தார்.

திருடப்பட்ட செல்போன் டவர்
திருடப்பட்ட செல்போன் டவர்

அப்போது பயன்பாடு நிறுத்தப்பட்ட செல்போன் டவரின் பேட்டரிகள், ஜெனரேட்டரின் உள் பாகங்கள், கேபிள் வயர்கள் உள்ளிட்டவைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 4 பேர் அந்த செல்போன் டவரில் ஏறி அதன் பாகங்களை கழட்டி கொண்டிருப்பதை பார்த்த அந்த இடத்தின் உரிமையாளரான அழகிரிசாமி, அவர் மகன் ஜெயராம் ஆகியோர் செல்போன் நிறுவன ஊழியரான ஜாகிர் உசேனுக்குத் தகவல் கூறினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையில், அந்த நான்கு பேரும் லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்டிருந்த செல்போன் டவரின் உதிரிபாகங்களுடன் தப்பினர். ஜாகிர் உசேன், அந்த நிறுவன ஊழியர்கள் சிலருடன் கழுகாசலபுரத்திற்கு வந்து பார்த்துவிட்டு எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதில், ஜமீன் இலந்தைகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரைப் பிடித்து செல்போன் நிறுவன ஊழியர்கள், எட்டயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உதிரி பாகங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட உதிரி பாகங்கள்

மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், தன் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து செல்போன் டவரின் உதிரி பாகங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மணிகண்டனின் நண்பர்களான எட்டயபுரத்தைச் சேர்ந்து சசிகுமார், தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த சின்னதுரை சங்கரேஸ்வரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களிடமிருந்து ஒரு லோடு ஆட்டோ, 2 பைக்குகள், ரூ.4 லட்சம் மதிப்புடைய உதிரி பாகங்கள் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம். ``செல்போன் டவர் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் சின்னத்துரை, சசிக்குமார் ஆகிய இரண்டு பேரும்தான் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் செயல்பாடில்லாமல் இருக்கும் செல்போன் டவர்களை நோட்டமிட்டு உதிரி பாகங்களை முதலில் திருடுவார்கள். பின்னர், டவரில் கம்பிகளை சிறிது சிறிதாகக் கழட்டி விற்று விடுவார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட லோடு ஆட்டோ
பறிமுதல் செய்யப்பட்ட லோடு ஆட்டோ

சின்னத்துரை மீது சென்னை ஆவடி பகுதியில் செல்போன் டவரில் உதிரி பாகங்களைத் திருடப்பட்டதாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சசிக்குமார் தனியார் செல்போன் டவர் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு, திருட்டுக்கு அவர்களது நண்பர்களைப் பயன்படுத்தி திருடி வந்துள்ளனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என, 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். செல்போன் டவரையே திருடி விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism