Published:Updated:

சென்னை: செயின் பறிப்பு; கூட்டுப் பாலியல் வன்கொடுமை? - நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

சென்னையில் காரில் சென்ற இளம்பெண்ணை வழிமறித்த கும்பல், செயினைப் பறித்ததோடு அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தகவல் வெளியாகியிருக்கிறது. அது தொடர்பாக 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை: செயின் பறிப்பு; கூட்டுப் பாலியல் வன்கொடுமை? - நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

சென்னையில் காரில் சென்ற இளம்பெண்ணை வழிமறித்த கும்பல், செயினைப் பறித்ததோடு அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தகவல் வெளியாகியிருக்கிறது. அது தொடர்பாக 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

சென்னையை அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் கடந்த 7-ம் தேதி அதிகாலையில் இளம்பெண் ஒருவரும், அவரின் கார் டிரைவரும் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் சென்ற 5 இளைஞர்கள், காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் டிரைவரை அடித்து விரட்டி விட்டு இளம்பெண்ணை வலுகட்டாயமாக கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. பிறகு இளம்பெண் அணிந்திருந்த 6 சவரன் தங்க செயினையும் பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

செயின் பறிப்பு
செயின் பறிப்பு
சித்திரிப்புப் படம்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணோ, செயின் பறிப்பு சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு புகாரளித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் போலீஸார் செயின் பறிப்பு தொடர்பாக வழக்கு பதிவுசெய்து இளம்பெண் கூறிய இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது காரின் டிரைவர் அடித்து விரட்டப்படும் காட்சியும், 5 பேரும் இளம்பெண்ணை வலுகட்டாயமாக கையைப் பிடித்து இழுக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது. அது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரித்தபிறகே அவர் நடந்த உண்மையைக் கண்ணீர்மல்க தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, இளம்பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த கொடுமை குறித்து ஆவடி கமிஷனர் அலுவலக காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு தகவல் கொண்டு செல்லப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளம்பெண்ணிடம் தவறாக நடந்த 5 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களும் நடந்தச் சம்பவத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

கைது
கைது

இதையடுத்து போலீஸார் வழிப்பறி வழக்கில் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவையும் சேர்க்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட 5 பேர்மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா போதையில் இளம்பெண்ணை கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணோ, இந்தத் தகவல் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கூறி வருகிறார். அதனால், போலீஸார், என்ன செய்யலாம் என சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். அதன்பிறகே வழிப்பறி வழக்கோடு பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவையும் சேர்ப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.