Published:Updated:

பணம் கேட்டு டார்ச்சர்; மகனைத் தீர்த்துக் கட்டிய தாய் - சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தம்பி?

மண்ணச்சநல்லூர்
News
மண்ணச்சநல்லூர்

ஒருகட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாத தாய் அம்சவள்ளி சதீஷ்குமாரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். புல்லட்ராஜா என்பவரிடம் ஐந்து லட்ச ரூபாய்க்குப் பேரம் பேசி 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.

லாரி உரிமையாளர் கொலை வழக்கில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வின் தம்பி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் பயங்கரம்
திருச்சியில் பயங்கரம்

திருச்சி மண்ணச்சநல்லூர் காந்திநகரைச் சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம் - அம்சவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு அமிர்தராஜ், சதீஷ்குமார் என இரு மகன்கள். இதில் சதீஷ்குமார் சொந்தமாக லாரி ஒன்றை வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கின்றனர். சதீஷ்குமார் அவர் தாயார் அம்சவள்ளியிடம் பூர்வீக சொத்தில் பங்கு கேட்டு பிரச்னையில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் இடத்தை ஒன்றரை கோடிக்கு விற்று அண்ணன் தம்பி இருவருக்கும் தலா 45 லட்சம் பணத்தைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சதீஷ்குமார் வாங்கிய கடனை கொடுத்ததோடு, மீதமிருந்த பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து குடித்தே அழித்திருக்கிறார். பணம் தீர்ந்த நிலையில் மீண்டும் தன் தாயிடம் இருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சதீஷ்குமார்
கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சதீஷ்குமார்

ஒருகட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாத தாய் அம்சவள்ளி சதீஷ்குமாரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். புல்லட்ராஜா என்பவரிடம் ஐந்து லட்ச ரூபாய்க்குப் பேரம் பேசி 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். பணத்துக்காக நண்பனைக் கொலை செய்யத் திட்டமிட்ட அவர்கள் வடக்கு ஈச்சம்பட்டியிலுள்ள வறட்டு ஏரிக்குச் சென்று அங்கு மது குடித்திருக்கிறார்கள்.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

போதை தலைக்கேறியதும் சதீஷ்குமாரைத் தலையில் அடித்ததில் மயக்கம் அடைந்துள்ளார். மீண்டும் கை, கால்களைக் கட்டிப் போட்டு அடித்திருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் ஏரியில் வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சதீஷ்குமாரின் அண்ணன் அமிர்தராஜ் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் தம்பியைக் காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த புல்லட் ராஜா, சுரேஷ், ராஜா, பாண்டி, ஷேக் அப்துல்லா, அரவிந்த் என ஆறு பேரைக் கைது செய்தனர்.

கொலை
கொலை

தலைமறைவாக உள்ள பிச்சைமுத்து என்பவரை போலீஸார் தேடிவருகின்றனர். புல்லட் ராஜா என்பவர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களைத் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``சதீஷ்குமார் பணத்தைக் குடித்தே அழித்திருக்கிறார். அவர் கொடுத்த டார்ச்சர் தாங்கமுடியாமல் தாயார் அம்சவள்ளி பணத்தைக் கொடுத்து ஆளை தீர்த்துக்கட்டியிருக்கிறார்.

போலீஸார்
போலீஸார்

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், குடிகார நண்பர்களை வைத்து கொலை செய்ய வைத்தது தான். கைது செய்யப்பட்டிருக்கும் ஆறு பேரும் சதீஷ்குமாரின் நண்பர்கள். எப்போதும் ஒன்றாகவே சுற்றி திரிபவர்கள். வேறு ஆள்களை வைத்துக் கொலைசெய்தால் விஷயம் பெரிதாகிவிடும் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகவே அவன் கூடவே சுற்றும் நண்பர்களை வைத்து கொலை செய்திருக்கிறார் அவரின் தாய்.

மண்ணச்சநல்லூர் காவல்நிலையம்
மண்ணச்சநல்லூர் காவல்நிலையம்

இதில் புல்லட் ராஜா என்பவன் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் தம்பி. இவனும் இந்தப் பகுதியில் குடித்துவிட்டு அட்டகாசம் செய்வதைத் தொடர்கதையாக வைத்திருப்பவன். இந்த வழக்கு குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு பேசுங்கள்" என்று முடித்துக்கொண்டனர்.