Published:Updated:

சென்னை: பிரிஞ்சி சாப்பிடச் சென்ற சிறுவன் வெட்டிப் படுகொலை! - என்ன நடந்தது?

கொலை
News
கொலை

சென்னையில் அம்மாவிடம் 20 ரூபாயை வாங்கிக் கொண்டு பிரிஞ்சி சாப்பிடச் சென்ற சிறுவன் கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு இ பிளாக் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், கடந்த 26.12.2021-ம் தேதி மதியம் 12 மணியளவில் தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் மாதா கோயில் தெருவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சிறுவனின் அம்மா புவனேஸ்வரி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``என் கணவர் சிவா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். எங்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இளைய மகனுக்கு 17 வயதாகுகிறது. அவன் 8-வது வரை படித்திருக்கிறான்.

கொலை
கொலை

26-ம் தேதி பிரிஞ்சி சாப்பிட்டுவிட்டு வருவதாகக் கூறி என்னிடமிருந்து 20 ரூபாயை அவன் வாங்கிச் சென்றான். அதன்பிறகு எங்களது குடியிருப்பில் உள்ள ஜி பிளாக் முன் சண்டை நடப்பதாக நான் கேள்விபட்டு அங்கு சென்றேன். அப்போது பசுபதி என்பவனை வெட்டி விட்டதாகவும் அந்தச் சண்டையின்போது என்னுடைய மகன் அங்கு இருந்ததாகவும் சொன்னார்கள். அதன்பிறகு என்னுடைய மகனை பசுபதியின் சொந்தக்காரர்களான வரதன், வசந்த், பாபா, சந்துரு இன்னும் சிலர் வண்டியில் துரத்திச் சென்றதாக கூறினார்கள். அதனால் என்னுடைய மகனை சுனாமி குடியிருப்பு முழுவதும் தேடி பார்த்தேன். அப்போது வைத்தியநாதன் மேம்பாலத்திலிருந்து இறங்கிய ஆட்டோவிலிருந்து எனது மகனை கீழே இறங்கிய பசுபதியின் உறவினர்கள் வலுகட்டாயமாக பைக்கில் ஏற்றி சென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்களைப் பின்தொடர்ந்து நான் சென்றபோது வ.உ.சி நகர் மாதா கோயில் தெருவில் ஒருவரை வெட்டி கொலை செய்து போட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது என்னுடைய மகனை வெட்டி கொலை செய்தது தெரிந்தது. எனவே என் மகனை வெட்டி கொலை செய்த வசந்த் சந்துரு வரதன், பாபா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்"என்று குறிப்பட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி, 147, 148, 341, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கைது
கைது

இந்தக் கொலை வழக்கில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் (22), எண்ணூரைச் சேர்ந்த சினேக் சசி (28), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வரதராஜன் (36), சந்திரசேகர் என்கிற சந்துரு (32), பார்த்திபன் என்கிற பாபா (32), பார்த்திபன் (27) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பட்டா கத்திகள், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சினேக் சசி, வரதராஜன், சந்துரு, பார்த்திபன் என்கிற பாபா ஆகிய 4 பேர்கள் தண்டையார்பேட்டை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.